புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தோனியை மதிக்காமல் செயல்பட்ட இந்திய அணியின் மெக்ராத்.. கேரியரை தொலைத்து இப்போ வருந்தும் வீரர்

2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணியை வழிநடத்தும் ஒரு மிகப்பெரிய பொறுப்பு மகேந்திர சிங் தோனி இடம் ஒப்படைக்கப்பட்டது. தோனி அப்பொழுது இளம் வீரர் பெரிய ஜாம்பவான்கள் ஆகிய சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சௌரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் காலத்திலேயே அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

வருங்கால இந்திய அணியை கட்டமைக்கும் விதத்தில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. தோனி வந்தபின் இந்திய அணியில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவந்தார். அது சீனியர் வீரர்களுக்கு பிடிக்கவில்லை.

இளம் படைக்கு தோனி முக்கியத்துவம் கொடுத்தார். அணியிலிருந்து சௌரவ் கங்குலி, விரேந்திர சேவாக் ஓரங்கட்டப் பட்டனர், ராகுல் ட்ராவிட் டெஸ்ட் போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளிலும் மட்டும் தோனியின் தலைமையில் சிறிது காலம் விளையாடினார்கள்..

அப்போது இந்திய அணியில் வளர்ந்துவரும் வீரராக இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ரா இடம்பெற்றிருந்தார். அவர் தோனி தலைமையில் விளையாட ஏதோ சங்கடத்தில் இருந்துள்ளார். அவர் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே காயத்தினால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார்.

அந்த சமயத்தில் தோனி அசிஸ் நெஹ்ராவிற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை வழங்கினார். ஆனால் காயங்களை யோசித்து நெஹ்ரா அதை நிராகரித்துள்ளார். மேலும் மகேந்திர சிங் தோனி நீங்கள் ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுரை கூறியுள்ளார். அவர் சொன்ன கருத்துக்களை காதில் கூட வாங்காத ஆஷிஸ் நெஹ்ரா இன்று அதை நினைத்து பெரிதும் வருந்தி வருகிறார்.

இந்திய அணிக்காக நெஹ்ரா வெறும் 17 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பங்களிப்பை அளித்த நெஹ்ரா டெஸ்ட் போட்டிகளில் செயல்பட தவறிவிட்டார் என்றே கூறலாம். இவரது கடைசி டெஸ்ட் போட்டியாக 2004ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

Trending News