விடாமுயற்சி படத்துக்கு முன்னால் அஜித் தற்போது நடித்து வரும் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் ஆகிடும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 அனைத்து தியேட்டர்களிலும் ரிலீஸ் என்று ட்ரெய்லருடன் அறிவிப்பு வந்தது.
இதற்கிடையில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பஞ்சாயத்து முடிவுக்கு வந்ததால் தான் இப்பொழுது அவசரமாய் தேதியை அறிவித்துள்ளனர்.1997ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான “பிரேக் டவுன்” கதையின் தழுவல் தான் இப்பொழுது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம்.
இந்தப் படத்தின் உரிமை பெரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்துள்ளது. விடாமுயற்சி கதையை அறிந்த அவர்கள் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் சுமார் 100 கோடிகள் வரை அபராதம் கோரி வழக்கு தொடர போவதாகவும் அறிவித்திருந்தனர்.
லைகா தரப்பு தான் இயக்குனர் மகில் திருமேனியிடம் “பிரேக் டவுன்” படத்தை சிபாரிசு செய்து எடுக்க சொல்லி இருக்கிறது. முறைப்படி அனுமதியும் வாங்கவில்லை. அதனால் இப்பொழுது பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது லைக்கா. 10 கோடி ரூபாய் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அதுவும் போக விடாமுயற்சி படத்தின் லாபக் கணக்கில் 10 முதல் 20 சதவீதம் தருவதாகவும் இவர்கள் நடத்திய பஞ்சாயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. இதனால் தான் அவசர அவசரமாக இப்பொழுது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். அஜித்தின் அடுத்த படமாகிய குட் பேட் அக்லி ஏப்ரல் 10ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
பல படங்களை தயாரித்து சினிமா உலகின் நம்பர் 1 நிறுவனமாக வலம் வருபவர்கள் லைகா. இவர்களுக்கு கூட ஒரு படத்திற்கு முறையான அனுமதி வாங்கிய பின் தான் அந்த கதையில் உரிமை கொண்டாட முடியும் என்பது கூட தெரியவில்லை. இப்பொழுது பெரமவுண்ட் பிக்சர்ஸ் மூலம் பாடம் கற்றுக் கொண்டுள்ளனர்