ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அந்த ஒரு விஷயத்தில் கோட்டைவிட்ட கேஜிஎஃப் 2.. யோசிக்காமல் பண்ணிய பெருந்தவறு

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதன் முதல் பாகம் வெளியான போதிலிருந்தே இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தை ஒரு இடத்தில் கூட குறை சொல்ல முடியவில்லை என்று ரசிகர்கள் கூறிவந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் அவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அதாவது இந்த படத்தின் முதல் பாகத்தில் கதை சொல்லும் பின்னணி குரல் ஒன்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் நிழல்கள் ரவி தான். அவருடைய அந்த குரல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தில் நிழல்கள் ரவிக்கு பதில் பிரகாஷ்ராஜை வைத்து கதை சொல்லும் அந்த கதாபாத்திரத்தை முடித்துள்ளனர். இதுதான் தற்போது ரசிகர்களின் மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு காரணமாக இருக்கிறது.

ஏனென்றால் முதல் பாகத்தில் நிழல்கள் ரவியின் அந்த குரல் வளமும், கம்பீரமும் ரசிகர்களுக்கு படத்துடன் பயணம் செய்யும் ஒரு உணர்வை கொடுத்தது. அதில் இடம்பெற்ற வசனங்கள் கூட அவர்களின் அடிமனதில் மிகவும் ஆழமாக பதிந்தது. அந்த அளவுக்கு அந்த குரலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

அத்தகைய வரவேற்பு தற்போது பிரகாஷ்ராஜின் குரலுக்கு கிடைக்கவில்லை. அது படத்திற்கு மிகப்பெரிய குறையாக அமைந்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் நிழல்கள் ரவியிடம் ஏன் நீங்கள் வாய்ஸ் கொடுக்கவில்லை என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கு பதிலளித்த நிழல்கள் ரவி உங்களுடைய ஏமாற்றம் எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு மிக்க நன்றி. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் என்னுடைய குரலை ஏன் பயன்படுத்தவில்லை என்று எனக்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Trending News