ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

அழுக ஒன்னும் வேண்டா ஓகே.. சொம்படி அன்ஷிகா, அந்த கரடி மூஞ்சியனுக்கு என்ன ஒரு ஆனந்தம்

தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 அன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும் புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என புது விதிமுறைகள், 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் உள் நுழைந்தனர்.

இந்த முறை சிறு தொய்வு கூட இல்லாமல், ஆரமிபித்த நாள் முதல் கன்டென்ட் வாரி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதன் 12 ஆம் நாளான நேற்று, சிறப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போட்டியாளர்கள் தங்களுக்குள் அவார்ட் வழங்கி கொள்கின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த புரோமோவில் முத்தக்குமாறான் அடுத்து செய்யப்போகும் ஷோ பிபி அவார்ட்ஸ் என டாஸ்க்கை படிக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களும் கார்டன் ஏரியாவில் கூடி ஒருவருக்கொருவர் அவர்கள் தேர்ந்தெடுத்த அவார்ட்டை கொடுக்கின்றனர்.

பிரிச்சு விட்டு தான் அனுப்புவாங்க போல..

இதில் முதலில் பவித்ராவிற்கு ஆடியன்ஸ் வாச்சிங் ஆடியன்ஸ் என்ற ஆவார்தை ரஞ்சித் வழங்குகிறார். பின்னர் ஜெப்ரிக்கும் இதே ஆடியன்ஸ் வாச்சிங் ஆடியன்ஸ் அவார்டை பெண்கள் வழங்குகின்றனர். இதை தொடர்ந்து, jeffry, தன்னை கலாய்த்ததைக்கூட உணராமல் இந்த விருதை பெருமையுடன் ஏற்றதோடு, இது தான் முதல் அவார்ட் என்று சந்தோஷமாக கூறுகிறார்.

ஜாக்குலினிற்கு எந்த பங்களிப்பையும் வழங்கவில்லை என டம்மி பாவா என்ற அவார்ட் கொடுக்கப்படுகிறது. அதற்கு இது தான் நான் என நினைத்து இருந்தீங்கனா? ப்ளீஸ் வேக் அப் எனத் தெரிவிக்கிறார். பின்னர் தர்ஷாவிற்கு டிராமா குயீன் என்ற அவார்ட் வழங்குகின்றனர். முத்துவிற்கு டம்மி பாவா என்ற அவார்டை தர்ஷா வழங்குகிறார்.

கடைசியாக, இத இத இத தானே நான் எதிர்பார்த்தேன் என்று விஜய் டிவியை மகிழ்வித்திருக்கிறார்கள், அர்னவ் மற்றும் அன்ஷிதா. அர்ணவ் சொம்பு தூக்கி என்ற அவார்டை அன்ஷிதாவிற்கு வழங்குகிறார். அதனை சொல்லும் போதே மிகவும் குஷியாக சொம்பு தூக்கி எனக் கூறுகிறார்.

பின்னர் இதனை வாங்க வந்த அன்ஷிதா, உண்மையிலேயே நான் யாருணு ரொம்ப தெரிஞ்ச ஒருத்தர் கையில இருந்து வாங்குறேன் எனக் கூறுகிறார். அதன் பின் மிகவும் மணம் உடைந்து அழுகிறார்.

இந்த நிலையில் வெளியான இந்த ப்ரோமோ கூட ஒரு ட்ராமா தான் என்று கூற படுகிறது. முக்கியமாக இரண்டாவதாக வந்த ப்ரோமோவில், இதை யார் கொடுத்தாலும் ஏற்று கொண்டு இருப்பேன். ஆனால் என் நண்பனே இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதை பார்த்த நம்மை போன்ற பாவப்பட்ட மக்கள், ‘ஏதே.. நண்பனா? என்னமா பொசுக்குன்னு புருஷன நண்பன் ன்னு சொல்ற..’ ன்னு சொல்லி கேலி செய்துகொண்டிருக்கிறார்கள்என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News