புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக் பாஸ் 7ல் இந்த வாரம் வெளியேறப் போகும் முதல் நபர்.. ஓட்டிங் லிஸ்டில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

BB7: கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மற்ற சீசன்களை காட்டிலும் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்து சுவாரசியத்தை அதிகப்படுத்தினர். பிக் பாஸ் ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள், புது ரூல்ஸ்கள், முதல் வாரமே இரண்டு நாமினேஷங்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்காதது அனைத்தும் கடந்த வாரம் முழுவதும் நடந்தது.

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பவா செல்லதுரை, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அனன்யா, ரவீனா, ஜோவிகா, ஐஷு ஆகிய ஏழு போட்டியாளர்கள் தேர்வானார்கள். இவர்கள் ஏழு பேருக்கும் கடந்த வாரம் முழுவதும் ரசிகர்கள் தங்கள் ஓட்டுக்களை அளித்தனர்.

Also Read: கமலின் இன்றைய பஞ்சாயத்துக்கு வரும் 3 முக்கியமான விஷயங்கள்.. தாய்க் கிழவியுடன் செம டோஸ் வாங்க போகும் கேப்டன்

மற்ற சீசனங்களில் எல்லாம் வயதில் மூத்தவர்களை தான் முதலில் வெளியேற்றி விடுவார்கள். அந்த வகையில் பவா செல்லதுரை, விசித்ரா, யுகேந்திரன் ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவர் தான் முதலில் வெளியேறுவார்கள் என நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல் நாளே யூகித்தனர்.

ஆனால் அதிரடி டிரஸ்ட் ஆக தற்போது வெளியாகி இருக்கும் ஓட்டிங் லிஸ்டில் ரவீனா, ஐஷு, பிரதீப் ஆண்டனி ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக ஜோவிகா, பவா செல்லத்துரை, யுகேந்திரன் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

Also Readபடிப்பு வரலைன்னா என்ன இந்த விஷயத்தில் ஜோவிகா கெட்டிக்காரி.. விஜயகுமாரை வம்பு இழுத்த வாரிசு

கடைசி இடத்தில் அனன்யா மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்று இந்த வாரம் வெளியேற்றப்படுகிறார். இவரை இதற்கு முன்பு தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக தெரியாது. தமிழையும் தட்டுத் தடுமாறி தான் பேசுவதால், எதற்கு இவர் வீட்டில் இருந்துகிட்டு என்று வெளியேற்றி விட்டார்கள்.

ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அனன்யா செம போல்டாக பேசினார். அவர் மட்டும் இந்த வாரம் வெளியேறாமல் இருந்திருந்தால் நிச்சயம் டஃப் கொடுத்து இருப்பார். அத்துடன் நேற்றுதான் விஷ்ணு- அனன்யா காதல் ட்ரக் துவங்கியது. அதற்குள்ளேயே ஊத்தி மூடிட்டீங்களே! என்று சிலர் ஆதங்கப்படுகின்றனர்.

பிக் பாஸ் 7 ஓட்டிங் லிஸ்ட்

bb-7-vote-list-cinemapettai
bb-7-vote-list-cinemapettai

Also Read: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.? பிக்பாஸ் வீட்டையே அலறவிட்ட ஜோவிகா, வாயடைத்துப் போன விசித்ரா

Trending News