வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக்பாஸ் சீசன் 8-ன் முதல் சண்டை, அமோகமாக ஆரம்பித்து வைத்த பாக்யாவின் வாரிசு.. காரணத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க!

Bigg Boss 8 Tamil: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று நாள் ஆகிவிட்டது இன்னும் எதுவும் ஆரம்பிக்கலையே என்று இருந்தது. பொதுவாக போட்டியாளர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள எப்படியும் ஒரு வாரமாவது ஆகிவிடும்.

ஒரு சிலர் தனக்கு கோபமே வராது என்பது போல் காட்டிக் கொள்வார்கள். ஒரு சிலரோ சண்டை போட்டா தான் உள்ளே இருக்க முடியும் என தப்பாக புரிந்து கொண்டு முதல் நாளிலிருந்து பிரச்சனைக்காக காத்துக் கொண்டே இருப்பார்கள்.

போட்டியாளர்கள் சண்டை போட எந்த விதத்திலும் தயங்க கூடாது என்பதற்காக பிக் பாஸ் அவராகவே கண்டெண்டுகளை கொடுப்பார். இந்த எட்டாவது சீசனில் முதலில் யார் சண்டை போடுவார்கள், எதற்காக சண்டை போடுவார்கள் என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்திருக்கும்.

பிக் பாஸ் எட்டாவது சீசனின் முதல் சண்டையை பாக்கியலட்சுமியின் வாரிசு தொடங்கி வைத்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் பாக்யாவின் இரண்டாவது மகனாக எழில் என்னும் கேரக்டரில் நடித்தவர்தான் விஷால்.

காரணத்தை கேட்டா அசந்து போயிடுவீங்க!

இவர் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். விஷாலுக்கு பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஷாலுடன் சண்டை போட்ட பெண் மட்டும் எதற்கும் சளைத்தவர் இல்லை.

ஈரமான ரோஜாவே சீசன் 1 சீரியல் மூலம் எல்லோரோது மனதிலும் இடம் பிடித்த பவித்ரா தான். அதாவது பவித்ராவை விஷால் டி போட்டு கூப்பிட்டதால் இந்த சண்டை ஆரம்பமாகி இருப்பது போல் தெரிகிறது. நான் சாரி கேட்க முயற்சி செய்தும் இந்த பெண் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறாள் என விஷால் குற்றம் சாட்டுகிறார்.

அதே நேரத்தில் பவித்ரா நான் கிச்சனில் வைத்தே நான்கு முறைக்கு மேல் சொல்லிவிட்டேன் என்னை டி போட்டு கூப்பிடாதே என்று என அவர் ஒரு பக்கம் கதறுகிறார். இடையில் சமாதானம் பண்ணுகிறேன் என்ற பேர் வழியில் போட்டியாளர்கள் கூட்டமாக கைய்யொ முய்யோ என கத்தி கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஆண் போட்டியாளர்கள் நீ வந்து அவளிடம் மன்னிப்பு கேள் என விஷாலை அழைத்து செல்வது போல் இந்த ப்ரோமோ முடிந்து இருக்கிறது. எது எப்படியோ விஜய் டிவியின் ப்ராடக்டுகள் முதல் சண்டையை அமோகமாக ஆரம்பித்து வைத்து விட்டார்கள். இனி பிக் பாஸ் வீடு பற்றி அறிய ஆரம்பித்து விடும்.

Trending News