Bigg Boss 8: பிக் பாஸ் எட்டாவது சீசனில் இருந்து ஜாக்குலின் எலிமினேட் ஆகி இருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த வாரம் முடிவடைய இருக்கிறது.
ஏற்கனவே தீபக் மற்றும் அருண் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகியது எல்லோருக்குமே பெரிய அதிர்ச்சி தான்.
அந்த வகையில் ஸ்ட்ராங்கான பிளேயராக கருதப்பட்ட ஜாக்குலின் இன்று மணி டாஸ்க் முடிக்க முடியாமல் எலிமினேட் ஆகியிருக்கிறார்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா?
முத்துக்குமரன், ராயன் மற்றும் விஷால் போன்றவர்கள் பணப்பெட்டி கேமில் வெற்றி பெற்றிருந்தார்கள்.
இறுதியாக 8 லட்சம் ரூபாய் இருக்கும் எடுப்பதற்கு ஜாக்குலினுக்கு 35 வினாடிகள் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் 37 வினாடிகள் எடுத்துக் கொண்டு போட்டியில் இருந்து எலிமினேட் ஆகியிருக்கிறார்.
இந்த நிலையில் ஜாக்குலினின் சம்பள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் விளையாட்டில் பங்கேற்க ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேசி ஜாக்குலின் உள்ளே வந்திருக்கிறார்.
தற்போது 101 நாட்கள் வீட்டிற்குள் இருந்த நிலையில் அவர் 25 லட்சத்தி 25 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கிறார்.