வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

துணிவு படத்தில் இணைந்த பிக் பாஸ் ஜோடிகள்.. அசர வைக்கும் அப்டேட்

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் படம் துணிவு. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

துணிவு படம் ஒரு வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் துணிவு படம் வாரிசு படத்திற்கு போட்டியாக பொங்கல் ரிலீசுக்கு வர உள்ளதாக ஒரு செய்தி கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

Also Read : முதல் நாள் கலெக்ஷனில் மிரட்டிய 10 திரைப்படங்கள்.. முதலிடத்தை தக்க வைத்துள்ள அஜித்

இந்நிலையில் துணிவு படத்தில் விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பெரும்பாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான காரணம், இந்த வாய்ப்பின் மூலம் வெள்ளி திரையில் பெரிய பட வாய்ப்புகளை பெறுவதற்காகத் தான்.

அவ்வாறு பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்து கொண்ட மூன்று பிரபலங்கள் துணிவு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்த சிபிச்சந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்தார்.

Also Read : பொன்னியின் செல்வன் படத்துக்கு வந்த ஆபத்து.. ஏற்கனவே விஜய், அஜித் படத்தில் நடந்த அராஜகம்

தற்போது இவரும் துணிவு படத்தில் இணைந்துள்ளார். மேலும் கடந்த சீசனில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜோடி அமீர், பாவனி. இதில் கிடைத்த வரவேற்பின் மூலம் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றனர். விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் அமீர், பாவனி, சிபி மூவரும் துணிவு படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் சமீபத்தில் துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்றுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாவனி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Amir-Pavani-Cibi

Also Read : அஜித் கவனத்திற்கு வராத பெரிய மோதல்.. ஹெச் வினோத் போடும் மோசமான சண்டை

Trending News