திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிக் பாசை சாணியில் முக்கி அடித்த போட்டியாளர்.. ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு

இதெல்லாம் போலி.. எல்லாமே ஸ்கிரிப்ட்.. எல்லாரும் நடிக்கிறாங்க. என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்ப்பவர்கள் ஒரு புறம் இருந்தாலும், சன் டிவியில் TRP போட்டியில் கிங்காக இருக்கும் கில்லி திரைப்படத்தை போட்டால் கூட அந்த நேரத்தில் பிக் பாஸ் பார்த்து TRP யை எகிரச் செய்யும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்தவர்கள் கூட பிக் பாஸ் பற்றி நேர்மறையான கருத்துகளைத்தான் கூறி இருக்கின்றனர். உதாரணத்திற்கு கஞ்சா கருப்பை கூட சொல்லலாம். இப்படி வெறும் நெகட்டிவ் விமர்சனங்களை வைத்தே ஒரு நிகழ்ச்சி ஹிட் அடித்தது என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டுமே.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சண்டையை மூட்டி விட்டு அதை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டி பார்வையாளர்களை உருவாக்கி வைத்து இருக்கிறது இந்த நிகழ்ச்சி. கஞ்சா கருப்பு வரிசையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மற்றுமொரு முன்னாள் போட்டியாளர் இந்த நிகழ்ச்சியினை தற்போது சாணியில் முக்கி அடித்து இருக்கிறார்.

நடிகையும் சர்ச்சை கருத்துக்களை அவ்வப்போது சொல்லி சமூக வலைத்தளத்தை அடிக்கடி திரும்பி பார்க்க வைக்கும் கஸ்தூரி, தற்போது பிக் பாஸ் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு பிக் பாஸ் விதிமுறைகளை சற்று மாற்றி ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் பழைய போட்டியாளர்களை பங்கேற்க செய்து அதிலும் குறிப்பாக வத்திக்குச்சி வனிதாவையும் இறக்கி ஆரம்பத்திலேயே பற்றி எரிய விட்டு இருக்கின்றனர். வனிதாவும் வழக்கம் போல கண்டெண்ட்களை வாரி வழங்கி வருகிறார். வனிதாவுக்கு இணையாக கன்டென்ட் கொடுக்க கூடிய கஸ்தூரி ஏன் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளவில்லை என்று இணையவாசிகள் கேட்டு இருக்கின்றனர்.

கடுப்பான கஸ்தூரி, அது ஒரு போலியான நிகழ்ச்சி. கடந்த முறை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சம்பளம் வாங்குவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல், எனக்கு நிறைய வேலை இருக்கிறது , பிக் பாஸ் பார்த்து கேவலமாய் பொழுதை கழிக்க விரும்பவில்லை என்று பிக் பாசை கழுவி ஊத்தி இருக்கிறார்.

kasthuri
kasthuri

அதுக்கும் மேலாக , வெளியில இருக்குற யாருக்கும் தெரியாது உள்ள போய் பாரு அப்போதான் தெரியும் என்பது போல செத்தா தான் சுடுகாடு தெரியும் என்று குமுறி இருக்கிறார். வடிவேலு சொல்வது போல பிக் பாஸ் நிகழ்ச்சி (நீ நெனைக்குற மாறி பெரிய பைட்டர் இல்லப்பா, ஒன்லி பில்டப்புப்பா) வெறும் பில்ட்டப் மட்டும்தான் போல.

Trending News