செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வன்மத்தால் வீழ்த்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. மக்கள் அவரைக் காப்பாற்றுவார்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது காரசாரமான சண்டைகள் உடன் அரங்கேறி வருகிறது. தற்போது ஒருவரை மட்டும் டார்கெட் செய்து போட்டியாளர்கள் நாமினேட் செய்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள்.

ஆனால் சிலர் வேறு துறையில் இருந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் சாதாரண பேச்சு வார்த்தைகள் கூட சிலருக்கு எரிச்சல் அடையச் செய்து சண்டையாக மாறி வருகிறது. மேலும் நேற்று தனலட்சுமி மற்றும் அசல் இடையே சண்டை நடைபெறும்போது அசீம் தனலட்சுமியை சமாதானப்படுத்தினார்.

Also Read :வாடி, போடி என அசிங்கப்படுத்திய போட்டியாளர்.. கத்தி கலாட்டா செய்த ஆயிஷா, ரேங்கிங் டாஸ்கால் வெடித்த பிரச்னை

அந்த சம்பவம் நடைபெறும் போது விக்ரமன் அங்கு இல்லாத காரணத்தினால் வந்த பிறகு தனலட்சுமி இடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். உடனே அசிம் கோவமாக விக்ரமனை திட்ட ஆரம்பித்து விட்டார். அங்கு ஏதோ பிரச்சினை நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விக்ரமன் கேட்டது பூதாகர சண்டையாக பிக் பாஸ் வீட்டில் வெடித்தது.

அதாவது விக்ரமன் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் அந்த தோணியிலேயே சக போட்டியாளர்களிடம் பேசுகிறார். அவர் பக்கம் நியாயமே இருந்தாலும் சொல்வதை சுருக்கமாக சொல்லாமல் வழவழவென்று பேசுவது சிலருக்கு எரிச்சல் ஆகிறது. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரியை கூட இவ்வாறு பேசுகிறார் என்று தான் ஹவுஸ் மேட்ஸ் நாமினேட் செய்தவர் வந்தார்கள்.

Also Read :பாக்யாயோட அருமை இப்ப தான் தெரியுது.. ஹனிமூன் முடிந்ததும் கசந்த காதலி

அதேபோல் தற்போது முதல் வாரத்திலேயே பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் விக்ரமனை டார்கெட் செய்து நாமினேட் செய்துள்ளனர். ஆனால் தற்போது மக்களுக்கு விக்ரமன் மீது நல்ல அபிப்பிராயம் வந்துள்ளது. மேலும் அசீம் நடவடிக்கை மீது ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.

இதனால் இந்த வார எலிமினேஷனில் இருந்து கண்டிப்பாக விகரமனை ரசிகர்கள் காப்பாற்றி விடுவார்கள் என தெரிகிறது. மேலும் பிக் பாஸ் வீட்டில் எதிலுமே ஈடுபாடு இல்லாமல் நிறைய போட்டியாளர்கள் இருக்கும் சூழ்நிலையில் வன்மத்தால் விக்ரமை மட்டுமே போட்டியாளர்கள் டார்கெட் செய்து வருகிறார்கள்.

Also Read :விவாகரத்து பின் மகளுக்காக ஏங்கும் ராபர்ட் மாஸ்டர்.. பிக் பாஸ் வீட்டில் கதறி அழுததின் பின்னணி இதுதான்

Trending News