புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிக் பாஸுக்கு பின் டாப் கீரில் செல்லும் 3 ஹீரோக்கள்.. காதலர்களை கலங்கடித்த ஜோ

Bigg Boss contestants who have recently given 3 successful films: வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் இருக்கும் நடிகர், நடிகைகள் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதற்கு காரணம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தான். இந்த விஷயம் மூன்று ஹீரோக்களுக்கு நல்லாவே ஒர்க் அவுட் ஆனது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மூன்று இளம் நடிகர்களின் மார்க்கெட் எகிறி டாப் கீரில் சென்று கொண்டிருக்கின்றனர்.

கவின்: இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையின் என்ற கேரக்டரில் நடித்து சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீட்சியமானார். அதன் பின்பு சினிமா வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்த கவின், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று லாஸ்லியா உடன் காதல் லீலைகளை எல்லாம் அரங்கேற்றினார்.

அதன் பின் கவின் நடிப்பில் லிஃப்ட் என்ற திரில்லர் படம் வெளியானது. தொடர்ச்சியாக வெளியான கவினின் டாடா திரைப்படம் 50 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூலில் பட்டையைக் கிளப்பியது. இப்போது கவினின் ரேஞ்சே வேற, இப்போது டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரியோ ராஜ்: தொடக்கத்தில் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணிபுரிந்த ரியோ ராஜ், அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், கல்லூரி சாலை போன்ற விஜய் டிவி சீரியல்களை நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருந்தார். அதே சமயத்தில் சினிமாவிலும் ஒரு சில பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்தது.

விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த சத்ரியன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ரியோ நடித்து, அதன்பின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அந்த படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸுக்கு பின் அவருடைய வாழ்க்கையே மாறிப் போய்விட்டது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜோ என்ற திரைப்படம் காதலர்களை சிரிக்க வைத்ததோடு அழ வைத்து நெகிழவும் வைத்தது. இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் எவ்வித எதிர்ப்பும் வரவில்லை. அந்த அளவிற்கு படத்தின் கதை ரசிகர்களை கவர்ந்ததால் வசூலிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் கல்லூரி காலத்தில் எழும் காதல் குறித்தும், அதன் பிறகு வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை குறித்தும் அழகாக நம்பித்தனர். இந்த படத்திற்கு பிறகு ரியோ ராஜை பார்க்கும் விதமே மாறிவிட்டது. அவரை ஒரு ஹீரோ மெட்டீரியலாக ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர்.

Also Read: 2023 ஆம் ஆண்டு ஜொலித்த 3 பிக் பாஸ் ஹீரோக்கள்.. டாடாவால் கவினுக்கு அடித்த ஜாக்பாட்

பிக் பாஸ் போட்டியாளர்கள் கொடுத்த 3 ஹிட் படங்கள்

ஹரிஷ் கல்யாண்: சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஹரிஷ் கல்யாண், தொடர்ந்து பொறியாளன், வில் அம்பு போன்ற படங்களிலும் நடித்தார். இருப்பினும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அவருடைய சினிமா கேரியரில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரு மனிதனிடம் இருக்கக்கூடிய ஈகோ அவருடைய வாழ்க்கையை எந்த அளவிற்கு புரட்டிப் போடும் என்பதை இந்தப் படத்தில் அழகாக காட்டினர். இதில் ஹரிஷ் கல்யாணின் உணர்ச்சிபூர்வமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்திற்குப் பிறகு அவருடைய மார்க்கெட்டும் எகிறியதால், தன்னுடைய சம்பளத்தையும் 2.5 கோடியில் இருந்துலிருந்து 4 கோடிக்கு உயர்த்தி விட்டார்.

Also Read: 2024ல் சம்பளத்தை உயர்த்திய 5 புது ஹீரோக்கள்.. ஜெட் வேகத்தில் போகும் ராஜாக்கண்ணு

Trending News