வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மனித கடிகாரமாக மாறிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.. ஃபினாலே டிக்கெட்டை வெல்லப்போவது யார்.?

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இப்போதுதான் கொஞ்சம் சூடு பிடித்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு என இருந்த பிக்பாஸ் வீடு இன்று பரபரப்பாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்கள் அனைவரும் மனித கடிகாரமாக மாறியதுதான்.

ஃபினாலே வருவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் டாஸ்க்கும் இப்போது கடுமையாக மாறி இருக்கிறது. அதன்படி இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடைபெறுகிறது. இதில் ஜெயிப்பவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்வார்கள்.

Also read: 2023-ஐ மிரட்டி விட்ட 7 சர்ச்சைகள்.. ஆண்டவருக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நின்ற பிரதீப்

அதன்படி மனித கடிகாரமாக மாறும் போட்டியாளர்கள் சரியான நேரத்தை பதிவு செய்ய வேண்டும். இதில் வெல்லும் இரண்டு நபர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் குதூகலமான போட்டியாளர்கள் டிக்கெட்டை பெறுவதற்காக போட்டி போட்டு வேலை செய்து வருகின்றனர். இதனால் நிகழ்ச்சியின் சுவாரசியம் கூடியிருக்கிறது. ஏனென்றால் இந்த சீசனில் தான் யார் டைட்டிலை வெல்வார்கள் என்று இதுவரை கணிக்க முடியாமல் இருக்கிறது.

Also read: இந்த வார நாமினேஷனில் வசமாக சிக்கிய 6 பேர்.. பிக்பாஸ் துரத்தி விடப்போவது இவரையா.?

இன்னும் சொல்லப்போனால் யாருக்குமே இதற்கான தகுதி இல்லை. நேர்மை என்பது இல்லாமல் வன்மத்தை மட்டுமே ஒவ்வொருவரும் கக்கி வருகின்றனர். அதனாலேயே இந்த சீசன் வெறுப்பை சம்பாதித்து உள்ளது.

ஆனாலும் ஒருவர் வெற்றி பெற்று தானே ஆக வேண்டும். அந்த ஒருவர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் மாயா, விசித்ரா, தினேஷ், மணி ஆகியோரில் ஒருவருக்கு இந்த டிக்கெட்டை பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Trending News