திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காதலை உறுதி செய்த பிக்பாஸ் பாவனி, அமீர்.. விஜய் டிவி உருவாக்கிய அடுத்த ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட காதல் ஜோடிகள் வந்தன ஓவியா, ஆரவ், பாலாஜி முருகதாஸ், சிவானி ஆகியோர் காதல் கிசுகிசுவில் சிக்கினார்கள். இவர்களது வரிசையில் கடைசியாக இடம் பிடித்தவர்தான் அமீர் மற்றும் பவானி.

வைல்டு கார்டு என்ட்ரி ஆக நுழைந்த அமீர் பவானியை காதலிப்பதாக பிக்பாஸில் கூறிவந்தார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு பேசுவது அவ்வப்போது ரொமான்ஸ் செய்வது, முத்தம் கொடுப்பது என தொடர்ந்து தங்கள் சேட்டைகளை பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து வந்தனர்.

அதனால் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மை எனவும் கூறினர். ஆனால் பவானி, அமீரை நண்பனாக நினைப்பதாக கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் பலரும் இவர்கள் காதலிப்பது உண்மை என கூறி வந்தனர்.

அதன்பிறகு பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடனம் ஆடி வந்தனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் அமீர் பவானிக்கு மோதிரம் வழங்கி காதலை தெரிவித்திருந்தார். பவானியும் அந்த மோதிரத்தை வாங்கிக் கொண்டார்.

தற்போது அமீரின் பிறந்தநாளுக்கு பவானி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி தனது வாழ்க்கையில் சந்தோஷம், துக்கம் இரண்டிலும் இருந்ததற்கு நன்றி எனவும் நீ ஒரு நல்ல மனிதன், லவ் யூ டா எனக் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகிறது.

amir bhavani
amir bhavani

Trending News