திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கண்ணீரில் மிதக்க விட்ட பிக்பாஸ் வீடு.. அசீமுக்கு தோல் கொடுத்த விக்ரமன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகள் ஆகியுள்ளனர். பார்ப்பதற்கு நிஜ பள்ளிக்கூடம் போலவே பிக் பாஸ் வீடு மாறி உள்ளது. இதில் நேற்று விக்ரமன் தமிழ் வாத்தியாராக அசத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி எல்லோரையும் கண்ணீரில் மிதக்க செய்துள்ளது. அதாவது பிக் பாஸ் போட்டியாளர்களில் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை ஒரு லெட்டரில் எழுதி உள்ளனர். அதை அவர்களே வாசிக்கவும் செய்கிறார்கள்.

Also Read : பிக் பாஸ் வரலாற்றிலேயே 4 முறையும் கேப்டனான மார்க்கண்டேயன்.. சினேகன், யாஷிகா சாதனை முறியடிக்கப்பட்டது

கார்டன் ஏரியாவில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அப்போது முதலாவதாக ஷிவின், அவர் ஒரு திருநங்கை என்பதால் தனது அக்கா பட்ட கஷ்டங்களை கண்ணீருடன் எழுதி உள்ளார். மேலும் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இடைத்தொடர்ந்து ஏடிகே தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

ஆகையால் தனது மகனுக்கு அந்த கடிதத்தை எழுதி உள்ளார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக உன்னை பிரிந்து மனவேதனையுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது அசீம் மனதை உருகி கண்ணீர் வரச் செய்துள்ளது. காரணம் அசீமும் தனது குழந்தையை பிரிந்த தான் வாழ்ந்து வருகிறார்.

Also Read : 7 பேருடன் ரெடியான இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்.. வாயாடி தூக்கி வீச போகும் பிக் பாஸ் வீடு

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே அவரது குழந்தையை பார்க்க முடியும். தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ளதால் தனது மகனின் ஏக்கத்தால் நிலைகுலைந்து போனார். அவருக்கு அப்போது தோழனாக தோல் கொடுத்து ஆறுதல் சொல்கிறார் விக்ரமன். இதைப் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

இவர்களைத் தொடர்ந்து அமுதவாணனும் தனது மனைவி மற்றும் குழந்தைகள் தன்னை வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தான் எதுவும் சாதித்தது இல்லை என்று மன்னிப்பு கேட்கிறார். இவ்வாறு ஒவ்வொரு போட்டியாளர்களின் கதையும் மனதை ரணம்ப்படுத்தும் விதமாக இருந்தது.

Also Read : ஆடியன்ஸ் மனதில் நங்கூரம் போட்டு அமர்ந்த போட்டியாளர்.. பிக் பாஸ் டைட்டில் இவருக்குத்தான்

Trending News