புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மாயா கூட்டணிக்கு ஜால்ரா போட்ட பிக்பாஸ்.. தினேஷ் கேப்டன்சிக்கு வச்ச பெரிய செக்

Bigg Boss 7: கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி 42 வது நாளை கடந்திருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக தினேஷ் தேர்வாகி இருக்கிறார். ஐந்து வாரங்களாக மாயா, பூர்ணிமா போன்றவர்களின் கேப்டன்சியில் பிக் பாஸ் வீடு இருந்தது. தினேஷ் கேப்டன் ஆன கையோடு பிக் பாஸ் வைத்த செக் ரொம்பவும் மோசமானதாக இருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 தொடங்குவதற்கு முன்பே இந்த முறை இரண்டு வீடு என கமலஹாசன் அறிவித்திருந்தார். அதன்படி அந்தந்த வாரம் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவர்கள் தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சமைத்து தர வேண்டும். இதுவரை இந்த விதி இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்த மாயா, பூர்ணிமா, ஜோதிகா போன்றவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்த தினேஷ், அர்ச்சனா, விசித்ராவை தரைக்குறைவாக நடத்தினார்கள். நாங்கள் கேட்டால் நீங்கள் சமைத்து தர வேண்டும், நாங்கள் சொல்லும் வேலையை மறுக்காமல் செய்து ஆக வேண்டும் என அடுக்கடுக்காக கட்டளையிட்டார்கள்.

Also Read:இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. செம போரிங் கண்டெஸ்ட்டை துரத்த போட்ட பிளான்

அடுத்த வாரம் கேப்டன்சியில் ஜெயித்த பிறகு, நம்ம எல்லாரும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போய்விடலாம் என மாயா மற்றும் பூர்ணிமா திட்டமிட்டு இருந்தார்கள். அந்தத் திட்டத்தில் மண்ணை அள்ளி போடும் விதமாக தினேஷ் நேற்று கேப்டன்சி டாஸ்க்கில் ஜெயித்தார். இவர்கள் தினேஷிடம் சிக்கி சின்னாபின்னம் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிக் பாஸ், மாயா கூட்டணிக்கு மொத்தமாக ஜால்ரா தட்டிவிட்டார். இந்த வாரம் யாருமே ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போக வேண்டாம் என அறிவிக்கப்பட்டு விட்டது. இரண்டு பெட்ரூம்கள், மூன்று பாத்ரூம்கள் இருக்கிறது. எதை வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள், எங்கு வேண்டுமானாலும் இருங்கள் என்று சொல்லிவிட்டார் பிக் பாஸ்.

இந்த வாரம் தினேஷ் கேப்டன் சிவில் மாயா கூட்டணி ஸ்மால் பாஸ் வீட்டிற்கு போகும் என எதிர்பார்த்த அவர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சி இருக்கிறது ஏற்கனவே கமல்ஹாசன் எபிசோடால் மக்கள் கொந்தளித்து போய் இருக்கிறார்கள். போதாத குறைக்கு எரிகிற தீயில் எண்ணையை ஊத்தி விட்டுருக்கிறார் பிக்பாஸ்.

Also Read:வெளியிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்.. கடைசி நேர எவிக்சனில் நடந்த குளறுபடி

Trending News