வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விரக்தியில் மனக்குமுறலை கொட்டி தீர்க்கும் பிக் பாஸ் மாயா.. இன்ஸ்டா-வில் போட்ட பதிவு

Bigg Boss Maya: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலேயே மாயா மீது பல சர்ச்சைகள் திரும்பி ரெண்டு வாரத்திலேயே வெளியேறும் அளவிற்கு மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் சில பல சூழ்ச்சிகளால் மாயா தொடர்ந்து அங்கே இருக்கும் அளவிற்கு அமைந்துவிட்டது. அத்துடன் பூர்ணிமா உடன் சேர்ந்து மாயா செய்த ஒவ்வொரு விஷயங்களும் அவருக்கு எதிராக திரும்பியது.

அந்த நிலையில் மாயா பூர்ணிமாவுடன் சேர்ந்த மற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வெளியேற ஆரம்பித்து விட்டார்கள். இதனைத் தொடர்ந்து மாயா மேல் இருக்கும் கோபத்தை விட பூர்ணிமா செய்யும் அலப்பறை தான் தாங்க முடியவில்லை என்று சொல்லும் அளவிற்கு திசை திரும்பி விட்டது. அதனால் மொத்த டார்கெட்டும் பூர்ணிமா மீது போய் விட்டது.

இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு நல்ல நேரம் இருந்ததனாலோ என்னமோ கடைசி வரை இவர்கள் இருக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதற்கிடையில் பூர்ணிமா தான் அங்கு இருப்பவர்களை விட மோசம் என்று சொல்லும் அளவிற்கு மக்களிடம் இருந்து ஒரு பெயரை எடுத்திருக்கிறார். இருந்தாலும் கடைசியில் புத்திசாலித்தனத்துடன் 16 லட்சம் பணப்பெட்டியை தூக்கி யாரும் என்னை பற்றி எதையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

Also read: இந்த 5 காரணங்களால் மட்டுமே டைட்டில் வின்னர் ஆகிய அர்ச்சனா.. ஆனாலும் இதில் தோல்வி தான்

எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை நான் வந்த நோக்கத்தை அடைந்து விட்டேன், என்பதற்கு ஏற்ப பணத்தையும் புகழையும் சம்பாதித்து விட்டார். அந்தப் புகழ் தப்போ சரியோ அதெல்லாம் விஷயமே இல்லை என்பதற்கு ஏற்ப வெளியே போய் ஓவர் ஆட்டம் போட்டு தான் வருகிறார். ஆனால் மாயா டாப் 3க்கு வந்தாலும் கையில் எனக்கு ஒன்னும் இல்லை என்பதற்கு ஏற்ப வெறும் கையுடன் போய்விட்டார்.

எப்படியோ நாம் டைட்டில் வின்னர் ஆகிவிடலாம் என்று ஒரு கற்பனை கோட்டை கட்டி வைத்தார். அதற்கு காரணம் கமல் இவருக்கு கண்மூடித்தனமாக சப்போர்ட் செய்தது வெளியே மட்டுமில்லாமல் உள்ளே இருப்பவர்களுக்கும் தெரிந்து விட்டது. அதனால் மாயாவிற்கு ஒரு நம்பிக்கை நாம் டைட்டில் வின்னர் ஆகிவிடுவோம் என்று. ஆனால் கடைசியில் அது ஏமாற்றமாக போய்விட்டது.

அதனால் வெளியே போன மாயா விரக்தியில் மனக்குமுறலை கொட்டி தீர்க்கும் அளவிற்கு அவருடைய இன்ஸ்டா-வில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதாவது கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல? என்று போட்டிருக்கிறார். வேற வழியே இல்லை இதையும் ஓவர் டேக் பண்ணி தான் வரவேண்டும் என்பதற்கு ஏற்ப மனதில் இருக்கும் சோகத்தை மறைத்து வருகிறார்.

bigg boss
bigg boss

Also read: சீசன் 7 துவக்கத்திலிருந்து, இறுதிவரை நடந்த சுவாரஸ்யம்.. ஐந்து ஃபைனல் லிஸ்ட்க்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் பரிசு

Trending News