வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிக்பாஸ் கொடுக்கும் மெகா மெகா ஆஃபர்.. பெட்டியை தூக்கப் போவது யாரு.?

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. அதன்படி கடந்த வாரம் நிக்சன், ரவீனா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்கள். அதை தொடர்ந்து இப்போது ஆட்டம் சூடு பிடித்துள்ளது.

பலரும் எதிர்பார்த்த அந்த ஒரு சம்பவம் இந்த வாரம் நடக்க இருக்கிறது. அதாவது ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பணப்பெட்டி மூலம் ஆஃபர் ஒன்றை கொடுப்பார். இதுவரை கடுமையான போட்டியாளர்களாக இருந்த கவின், கேப்ரில்லா உள்ளிட்ட பலர் அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி இருக்கின்றனர்.

Also read: மாயாவை வெற்றிபெற வைக்க நடக்கும் மிகப்பெரிய சூழ்ச்சி.. ஆதாரத்தை பார்த்தால் தலையே சுற்றுதே!

அதன்படி இந்த சீசனில் யார் அதை தட்டி தூக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஒரு லட்சம், 5 லட்சம் என பிக்பாஸ் தொகையை அதிகரித்துக் கொண்டே செல்கிறார். ஆனாலும் யாரும் அந்த பெட்டியை தொடவில்லை.

அதற்கு மாறாக மற்றவர்களை மூளை சலவை செய்து பெட்டியை தூக்க வைக்க முயற்சி செய்கின்றனர். அதில் தினேஷ் யாரும் இதை எடுக்க மாட்டார்கள் என்று கூறுகிறார். ஆனால் விசித்ரா யாராவது ஒருத்தவங்க அந்த பணப்பெட்டியை தூக்கிட்டு கிளம்புங்க என கூறுகிறார்.

Also read: பிக் பாஸ் வீட்டை விட்டு 90 நாட்களுக்குப் பிறகு வெளியேறிய நிக்சன்.. மஜாவாக சுற்றிய மன்மதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இப்படி போட்டியாளர்கள் அனைவரும் அதை எடுக்கலாமா வேண்டாமா என்ற குழப்ப நிலையில் இருக்கின்றனர். ஆனால் விஜய் வர்மா அல்லது விசித்ரா இருவரில் ஒருவர் அதை எடுப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எதிர்பாராததை எதிர்பார்ப்போம்.

Trending News