விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, ஸ்டார் மியூசிக் என பல முன்னணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களுக்கு பிடித்தமான தொகுப்பாளினியாக மாறியவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் டிடி-க்கு பிறகு இவருக்குத்தான் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
பிரியங்கா தற்போது அவருடைய தம்பி பிரவீன்க்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குழந்தையை கொஞ்சி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தெரிவித்திருக்கிறார். இந்தக் குழந்தைதான் தங்கள் குடும்பத்தின் முதல் வாரிசு என்று மெச்சிக் கொள்கிறார்.
பிரியங்கா சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமடைந்தார். அங்கு பிரியங்கா தனது சில செய்கைகளால் ரசிகர்களை கோபப்படுத்தினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய தம்பி பிரவீனும் வருகை தந்ததால், அவரும் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் ஆக மாறிவிட்டார்.
சமீபத்தில் பிரவீன் அவருடைய மனைவிக்கு வளைகாப்பு நடத்திய புகைப்படத்தையும் பிரியங்கா பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தனியார் யூடியூப் சேனலை வைத்திருக்கும் பிரியங்கா தன்னுடைய குறும்புத்தனமான வீடியோக்களை பதிவிட்டு லட்சக்கணக்கான நபர்கள் இவரை பின் தொடர செய்ய வைத்திருக்கிறார்.
பிரியங்காவிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரவீன் குமாரும் விஜய் டிவியின் தயாரிப்புக் குழுவில் பணிபுரிவதால், அவர் திருமணத்திற்கு பிறகு தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் செய்து வருகிறார்.
பிரியங்காவிற்கு திருமணமாகி ஆறு வருடம் ஆன நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் பிரியங்கா, தற்போது தன்னுடைய தம்பி மகளை பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்போது? என ஆர்வத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.