செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக்பாஸ் போய் பத்து பைசா பிரயோஜனம் இல்ல.. அது ஒரு பித்தலாட்டம் எனக் கூறி பப்ளிசிட்டி தேடும் நடிகர்

அமெரிக்காவில் தொடங்கப்பட்ட பிக்பிரதர் நிகழ்ச்சியின் தழுவலாக ஹிந்தியில் தொடங்கப்பட்டது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதன் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் தொடங்கப்பட்டது. சினிமாவை சேர்ந்தவர்கள் பிக்பாஸில் கலந்து கொண்டால் வாய்ப்புகள் அதிகமாகும் என இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழ் பிக்பாஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் சரியாக கவனிக்கப்படாமல் இருந்த இந்த நிகழ்ச்சி நாட்கள் செல்ல, செல்ல நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இப்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

Also Read: 17 வயதிலேயே திருமணம், ஏகப்பட்ட லவ் பிரேக்கப்.. பிக்பாஸ் நடிகையைப் பற்றி புட்டு புட்டு வைத்த முன்னாள் காதலன்

எத்தனை சீசன்கள் வந்தாலும் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட சீசன் என்றால் அது மூன்றாவது சீசன் தான். இந்த சீசனுக்கு இன்றளவும் ரசிகர்கள் உண்டு. இந்த சீசனில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா மரியனேசன், ஷெரின், தர்ஷன் மகாராஜா, கவின், சேரன், வனிதா, கஸ்தூரி, அபிராமி, மதுமிதா, மீரா மிதுன் ஆகியோருடன் 90ஸ் ஹீரோ சரவணனும் கலந்து கொண்டார்.

டாப் ஹீரோவாக வரவேண்டிய இவர், நீண்ட இடைவெளியால் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பிக்பாஸின் மூலம் வாய்ப்புகள் வரும் என்று அனைவரும் நம்பும் நிலையில் இவருக்கும் நல்ல சினிமா வாய்ப்பு வரும் என்று நினைத்தார். பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகும் அவருக்கு இன்று வரை எந்த ஒரு வாய்ப்பும் வரவில்லை. அதனால் அவர் பிக்பாஸினால் எந்த ஒரு மண்ணும் புரோஜனம் இல்லை என்று கோபத்துடன் கூறியுள்ளார்.

Also Read: பொண்ணுங்களை தடவி ரொமான்ஸ் செய்தததற்கு சம்பளத்தை வாரி கொடுத்த பிக்பாஸ்.. கொடுத்த வச்ச கோளாறு

பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் என் எண்ணை கண்டுபிடித்து பேசுகிறார்கள் அதுவே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியிருக்கிறார். அந்த சீசனில் கவின், சாண்டி, முகேன், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் சரவணனுடன் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அவரை அன்போடு சித்தப்பா என்றே அழைத்தனர்.

வீட்டில் உள்ளவர்களை ஒருமையில் பேசுகிறார் என்பது அந்த சீசனில் இவர் மீது குற்றச்சாட்டாக இருந்தது. மேலும் கமலஹாசன் தொகுத்து வழங்கிய எபிசோடில் இவர் கூறிய தகாத கருத்தினால் பாதியிலேயே வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். மேலும் வீட்டுக்குள் இருக்கும் போது இவருக்கும் இயக்குனர் சேரனுக்கும் இடையே எப்போதும் பிரச்சனையாகவே இருந்தது.

தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி கூறியிருக்கும் கருத்து சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன் அனைத்து விதிமுறைகளும் அவருக்கு கூறப்பட்டிருக்கும். அதை தெரிந்து கொண்டு சென்ற அவர் தற்போது குறை கூறுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேவையில்லாமல் இது போன்ற பப்ளிசிட்டியை கிளப்புவதற்காகவே அவர் பேசுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also Read: சாந்தி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக வாங்கிய சம்பளம்.. ஜி பி முத்துவை விட இவ்வளவு அதிகமா?

Trending News