வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஓவியாவிற்கு டஃப் கொடுக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. அறிமுகமாவதற்கு முன்பே ஆர்மியா?

விஜய் டிவியில் நேற்று பிரமாண்டமாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது. கடந்த ஒரு மாதங்களாக இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக யார் பங்கு பெறுகிறார்கள் என்று பல பெயர் பட்டியல் வெளியாகி இருந்தது. அதேபோல் விஜய் டிவியிலிருந்து பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 20 போட்டியாளர்களில் அமுதவாணன், மகாலட்சுமி, ரக்ஷிதா, சாயிஷா போன்ற பிரபலங்கள் பங்கு பெற்றுள்ளனர். அதிலும் எல்லோருக்கும் பரிச்சயமான ஜி பி முத்துவும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் கடந்த சீசன்களை விட இந்த சீசன் நன்றாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : சண்டையை மூட்டிவிட்டு ஆட்டத்தை ஆரம்பித்த பிக்பாஸ்.. முதல் வார நாமினேஷன் லிஸ்டில் 4 போட்டியாளர்கள்

ஏனென்றால் இதில் எல்லோருமே எதார்த்தமாக இருப்பதாக தெரிகிறது. கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கூட டைட்டில் வின்னரான ராஜு கேமரா முன்னால் நடிப்பது போன்று சிலர் யுகித்தார்கள். அவரும் தனது புத்திசாலித்தனத்தால் தான் இறுதிவரை பிக் பாஸ் வீட்டில் பயணித்தார் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே பலரும் எதார்த்தமாக இருப்பதாக தெரிகிறது. அதில் குறிப்பாக ஜிபி முத்து மற்றும் இலங்கையிலிருந்து வந்திருக்கும் ஜனனியும் மிகவும் எதார்த்தமாக உள்ளார்கள். ஜனனி ஒரு தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

Also Read : பிக் பாஸ்க்கு வந்து பெயரை கெடுத்துக்க போகும் பிரபலம்.. அடுத்த லாஸ்லியா இவங்கதான்

ஆரம்பத்தில் பிக் பாஸ் தொடங்கி இறுதி கட்டத்தை நெருங்கும் போது தான் ஓவியாவுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் நேற்று பிக் பாஸ் தொடங்கிய உடனே ஜனனிக்கு ரசிகர்கள் ஆர்மி தொடங்கியுள்ளனர்.

அவருடைய அழகு, எதார்த்தமான பேச்சு எல்லாமே ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. மேலும் ஜனனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 18.3k பேர் பின் தொடர்கிறார்கள். பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜனனி டஃப் கண்டஸ்டண்டாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : பிக் பாஸ் சீசன்-6 களமிறங்கும் 20 போட்டியாளர்களின் மொத்த லிஸ்ட.. வேட்டையாட காத்திருக்கும் ஆண்டவர்

Trending News