விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் நிறைவு பெற்றாலும் தற்போது வரை அதற்கான தாக்கம் மக்கள் மனதில் இருந்து கொண்டிருக்கிறது. அதாவது அசீம், விக்ரமன் இடையே கடுமையான போட்டி இருந்து வந்த நிலையில் டைட்டில் வின்னர் பட்டத்தை விக்ரமன் தான் பெறுவார் என பெரும்பாலான ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் அதற்கு நேர் எதிராக அசீம் டைட்டில் வின்னர் பெற்றதால் இணையத்தில் அபுயூஸ் அசீம் என்று ஒரு ஹேஷ்டேக் டிரெண்டானது. இந்நிலையில் பிக் பாஸ் இறுதி மேடையில் அசீம் வென்ற 50 லட்சத்தில் 25 லட்சத்தை கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் படிப்பு செலவுக்கு வழங்க உள்ளதாக அறிவித்தார்.
இதனால் அசிம் மீது இருந்த கடுமையான கோபம் சற்று குறைந்தது. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற அசீம் தெள்ளத்தெளிவாக இந்த விஷயத்தை பற்றி உருட்டி உள்ளார். அதாவது விஜய் டிவி கொடுத்த 50 லட்சத்தில் ஜிஎஸ்டி போக 35 லட்சம் தான் கையில் இருக்கும்.
இதில் பாதி தொகையான 17.5 லட்சத்தை மாணவர்களின் கல்விக்காக செலவழிப்பேன் என்று தற்போது கூறியுள்ளார். ஆரம்பத்திலேயே 50 லட்சத்தில் ஜிஎஸ்டி போக மீதமுள்ள பணம் தான் கிடைக்கும் என்பது அசீமுக்கு தெரியாதா. அப்போது 25 லட்சம் என்று சொல்லிவிட்டு இப்போது 17.5 லட்சம் தான் கொடுப்பேன் என்று சொல்கிறார்.
Also Read : குக் வித் கோமாளிலிருந்து துரத்தி விடப்பட்ட ஓட்டேரி.. படமே ஓடலனாலும் அடைக்கலம் கொடுத்த ஹீரோ
இன்னும் சில தினங்கள் போனால் நான் அப்படி சொன்னேனா என்று கேட்டால் கூட ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் அசீம் நினைத்த நேரத்திற்கு ஒன்று பேசி வருகிறார். ஏற்கனவே விக்ரமனுக்கு நிறைய ஆதரவு உள்ள நிலையில் இந்த விஷயம் தெரிந்த விக்ரமன் ரசிகர்கள் அசீமை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
இன்னும் சிலர் அசீம் கொடுப்பதாக சொன்ன தொகை அந்த மாணவர்களுக்கு சென்று அடைந்தால் மட்டுமே அதை உறுதியாக கூற முடியும் என்று கூறுகிறார்கள். இதனால் அசீமுக்கு இருந்த கொஞ்ச நெஞ்ச பெயரும் தற்போது அவருடைய நடவடிக்கையால் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Also Read : பிக் பாஸ்க்கு பிறகு வெளியில் ஆடும் கேவலமான கேம்.. அசீமுடன் சேர்ந்து விக்ரமனை கிழித்து தொங்கவிட்ட ராங்கி