திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான்.. அடித்து சொல்லும் நட்சத்திர ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிக ரசிகர்களை கவர்ந்த இரு போட்டியாளர்கள் விக்ரமன் மற்றும் அசீம். இதில் சில சமயங்களில் அசீம் தனது கோபத்தால் எல்லை மீறி நடந்து கொள்கிறார்.

ஆனால் எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் பயணித்து வருகிறார் விக்ரமன். விஜய் டிவியில் சில தொடர்களில் நடித்த விக்ரமன் அதன் பின்பு தனது பாதையை மாற்றிக் கொண்டுள்ளார். அதாவது அரசியல், ஜெனலிசம் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளதால் அதில் பயணிக்க தொடங்கி விட்டார்.

Also Read : கேள்விகளால் போட்டியாளர்களை திணறவிட்ட ஃபேன்ஸ்.. கமலே அசந்து பார்த்த பிக்பாஸ் சுவாரசியம்

முதல் வாரத்தில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படாத விக்ரமன் தொடர்ந்து தனது நிதானமான விளையாட்டால் பெரும் அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் விக்ரமன் தான் என்ற பாடகர் மற்றும் நடிகருமான யுகேந்திரன் மற்றும் அவரது மனைவி ஹேமமாலினி அடித்து கூறியுள்ளனர்.

கடந்த வாரம் நடந்த நீதிமன்றம் டாஸ்க்கில் கூட மிகச் சிறப்பாக தனது வழக்கை எடுத்து வைத்தார் விக்ரமன். ஆகையால் கடைசி பைனலிஸ்ட் போட்டியாளர்களில் விக்ரம் இருந்தால் ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என இவர்கள் கூறியுள்ளார்கள்.

Also Read : தேரை இழுத்து தெருவுல விட்ட மாமியார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

அசீமும் எங்களது நண்பர் தான். சில சமயங்களில் அவர் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறார். ஆனால் கோபம் வரும் போதும் அதை எப்படி கையாள வேண்டும் என்பது விக்ரமனுக்கு நன்கு தெரிந்து உள்ளது.

அவருக்கு பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டம் கிடைத்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என்ற யுகேந்திரன் தம்பதியினர் கூறியுள்ளனர். இவர்களது விருப்பம் மட்டும் அல்லாமல் பிக் பாஸ் ரசிகர்களில் பெரும்பாலானோர் விக்ரமன் டைட்டிலை அடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

Also Read : பிக் பாஸால் என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு.. கதறும் பிரபலம்

Trending News