சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கிராண்ட் ஃபினாலே உடன் துவங்கப்படும் பிக் பாஸ் சீசன் 6.. ஊத்தி மூடப்பட்ட புத்தம்புது சீரியல்

விஜய் டிவியில் சின்னத்திரை ரசிகர்களை இஷ்டமான என்டர்டைன்மென்ட் ஷோவான பிக் பாஸ் கடந்த ஐந்து சீசனை நிறைவு செய்து தற்போது 6-வது சீசன் வரும் அக்டோபர் 9-ம் தேதி 17 முதல் 20 போட்டியாளர்களுடன் துவங்கப் போகிறது.

ஆகையால் ப்ரைம் டைமில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப வேண்டும் என முடிவெடுத்து ஏற்கனவே விஜய் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலை 6.30 மணிக்கும், அதைத்தொடர்ந்து ஈரமான ரோஜாவே 2 சீரியலை 7 மணிக்கும் ஒளிபரப்பாகும் நேரத்தை மாற்றி வைத்துள்ளனர்.

Also Read: கண்ணமாவை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விவாகரத்து நடிகை.. வைரலாகும் புகைப்பட ஆதாரம்

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காக புத்தம் புது சீரியலை ஊத்தி மூடுகின்றனர். சமீபத்தில் துவங்கப்பட்டு வெறும் 120 எபிசோடுகளை மட்டுமே கடந்த, சிப்பிக்குள் முத்து என்ற சீரியலை நிறைவு செய்யப் போகின்றனர்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9-ம் தேதி மாலை 6 மணி அளவில் கோலாகலமாக கிராண்ட் பினாலே உடன் துவங்கப்படுகிறது. அன்று புதிய போட்டியாளர்களை அறிமுகம் செய்த பிறகு, திங்கள் முதல் வெள்ளி வரை 10 மணி முதல் 11 மணி வரை தொடர்ந்து ஒரு மணிநேரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.

Also Read: இந்த 6வது சீசனில் நிச்சயம் சம்பவம் இருக்கு.. இணையத்தில் லீக்கான பெண் போட்டியாளர்களின் லிஸ்ட்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல் அரை மணி நேரம் முன்னதாகவே 9.30 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாக போகிறது. ஏற்கனவே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியும் 24 மணி நேரமும் டிஸ்னி பிளஸ் ஸ்டாரிலும் ஒளிபரப்பாகிறது.

இந்த முறை முதல் முதலாக பொதுமக்களிடம் இருந்து ஒன்று அல்லது இரண்டு போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதால், கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து டிஆர்பியை எகிற வைப்பதற்காக ஒத்துவராத சீரியல்களை எல்லாம் ஊத்தி மூடிக் கொண்டிருக்கிறது.

Also Read: பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

- Advertisement -spot_img

Trending News