திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

எல்லாரையும் பார்த்தா உனக்கு மட்டமா இருக்கா?. பிரேக் விட்ட கேப்பில் வனிதா பொண்ணை வச்சு செய்த அமுல் பேபி

BB 7 Vishnu Jovika Fight: தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பது வனிதா மற்றும் ஜோவிகா விஷயத்தில் தான் பொருந்தும். பிக் பாஸ் மூன்றாவது சீசனில் வனிதா கண்டென்ட் கொடுத்ததை விட, அவருடைய மகள் ஜோவிகா இந்த ஏழாவது சீசனில் கொடுக்கும் கண்டென்டு எல்லாமே பரபரப்பாக தான் இருக்கிறது. 2K கிட்சுகளின் சப்போர்ட் வேற இவருக்கு ரொம்பவும் அதிகமாக இருக்கிறது.

முதல் வாரத்திலேயே அடிப்படை கல்வி வேண்டும் என்று பேசிய விசித்ராவை வம்படியாக சண்டை இழுத்து பரபரப்பை கிளப்பினார் ஜோவிகா. சண்டை முடிந்த பிறகு விசித்திராவிடம் அவர் நார்மலாக பேச முயற்சிக்க, அவரோ நீ என்னை மேம் என்று கூப்பிட்டாலே போதும் என மூக்குடைத்து அனுப்பி விட்டார். அதே கதை தான் இப்போது விஷ்ணுவிடமும் நடந்திருக்கிறது.

விஜய் டிவியின் ஆபீஸ் தொடர் மற்றும் ஜீ தமிழில் சத்யா தொடரில் நடித்த விஷ்ணுவுக்கு அவருடைய முகத்திற்காகவே அமுல் பேபி என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு தான் தெரிகிறது இவர் அம்மாஞ்சி இல்லை, பேசும் பேச்சிலும் செய்கையிலும் அதிக காரசாரத்தை காட்டிக் கொண்டு இருக்கிறார். அதிலும் இந்த வாரம் முழுக்க பட்டாசு கொளுத்தியது போலவே படபடத்து கொண்டு இருந்தார்.

நேற்று நடந்த கமலஹாசன் தொகுத்து வழங்கும் எபிசோடில் விஷ்ணு, ஜோவிகாவிற்கு சுய புத்தி இல்லாதவர் என்ற டைட்டிலை கொடுத்தார். அதற்கு கமல் காரணம் கேட்ட பொழுது, ஜோவிகா மற்றவர்கள் விஷயத்தில் தானாகவே வந்து மூக்கை நுழைப்பதாக சொல்லியிருந்தார். அதற்கு கமல், விஷ்ணுவை நோஸ்கட் செய்யும் விதமாக அதற்கு பெயர் சுய புத்தி இல்லாதவர் என்பது கிடையாது என்று சொல்ல, ஆடியன்ஸ்களும் கைதட்டி விட்டனர்.

இந்த சமயத்தில் பிரேக் விட்ட போது, ஜோவிகா மற்றும் விஷ்ணுவுக்கு இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. இப்போது விஷ்ணு ரொம்பவே டென்ஷன் ஆகி, உனக்கு சண்டை போட தான் தெரியும், மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாது, இங்கே இருப்பவர்களை பார்த்தால் உனக்கு மட்டமாக தெரிகிறதா, நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா என்று கேள்வி கேட்டார்.

மேலும் நீ என்னை அவன், இவன் என்று பேசியது போல் நான் உன்னை வாடி போடி என்று பேசினால் சரியாக இருக்குமா என்று கேட்டார். அதற்கு ஜோவிகா பதில் எதுவும் சொல்ல முடியாமல் மன்னிப்பு கேட்டார். ஜோவிகா பிரதீப் ஆண்டனியை வாடா போடா என்று பேசிய பொழுதே அவருக்கு பேச தெரியவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இது பற்றி இன்று ஆண்டவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News