வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸ் நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. விஷப்பாட்டிலை களையெடுக்க வேண்டியதுதான், வைரலாகும் ஓட்டிங் லிஸ்ட்

Bigg Boss Season 7 Voting List: பிக் பாஸ் சீசன் 7ல் இதுவரை நாமினேஷனில் பித்தலாட்டம் ஆடியவர்களை ஆண்டவர் நேற்று வச்சு செஞ்சு விட்டார். இதனால் இனிமேல் நாமினேஷனை பற்றி வெளியில் எதுவும் பேசக்கூடாது என்று, கடந்த சீசன்களில் இருந்த விதிமுறைகளை மறுபடியும் கொண்டு வந்தனர். இதற்கு முன்பு நடந்த நாமினேஷனில் குழுக்களாக செயல்பட்டு யாரை வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டு நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கெடுத்தனர்.

அதிலும் கடந்த இரண்டு வாரங்களாக கேப்டன் பதவியில் இருந்த பூர்ணிமா அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கமலே அவரை விலாசினார். இந்த சீசனில் மாயா, பூர்ணிமா இருவரும் சேர்ந்து செய்யும் அழுச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சமல்ல. இவர்கள் இருவரையும் கிளப்பி விட நேரம் வந்துருச்சு. இன்று நடந்த நாமினேஷன் ப்ராசஸில் ஐசு, ஆர்ஜே பிராவோ, தினேஷ், விசித்ரா, அர்ச்சனா, பூர்ணிமா உள்ளிட்ட ஆறு பேர் இடம் பெற்றனர்.

இதில் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளிலிருந்து வெளியே போகணும் என அழுது அடம் பிடிக்கும் அழுகாச்சி அர்ச்சனா தான் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இவர் இன்று வெளியான ப்ரோமோவில் காரசாரமாக மாயாவுடன் கடும் வாக்குவாதத்தில் இருக்கிறார். இதனால் இவருக்கு ரசிகர்களின் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல்தான் விசித்ரா ஓட்டிங் லிஸ்டில் 2வது இடத்தில் இருக்கிறார்.

Also read: கிள்ளி கொடுத்த சினிமா, அள்ளி கொடுத்த ஆண்டவர்.. கமலின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

பிரதீப்பை வெளியே அனுப்பியது ஒரு குரூப் ஆக்டிவிட்டி தான் என்று நாமினேஷன் ப்ராசஸில் வலுவான காரணத்தை சொல்லி பூர்ணிமாவை நாமினேட் செய்தார். ‘இந்த பூர்ணிமா, மாயா இருவரும் சேர்ந்து தான் பிரதீப் வீட்டில் இருந்தால் பாதுகாப்பின்மையை உணர்வதாக குற்றம் சாட்டி வெளியேற்றி விட்டனர். இதற்கு கூல் சுரேஷ் பிரச்சினையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்’ என்று விசித்ரா இன்று மாயா பூர்ணிமாவின் முகத்திரையை கிழித்தெறிந்து இருக்கிறார்.

இதனால் விசித்ராவிற்கு ஆதரவாக ரசிகர்களும் தங்கள் ஓட்டுக்களை அள்ளி வீசுகின்றனர். தொடர்ச்சியாக அடுத்தடுத்த இடத்தில் தினேஷ், ஆர்ஜே பிராவோ இருக்கின்றனர். கடைசி இரண்டு இடத்தில் ஐசு, பூர்ணிமா இருவரும் உள்ளனர். இவர்களுள் பூர்ணி தான் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார்.

‘நட்பா காதலா என தெரியல’ என்று காதல் ட்ராக் ஓட்டி நிக்சனை கழட்டிவிட்ட ஐசுவும் பிக் பாஸ் வீட்டில் இருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கல. அத்துடன் விஷ பாட்டில் பூர்ணிமாவை களையெடுக்க நேரம் வந்துருச்சு. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஐசு, பூர்ணிமா இருவரும் தான் டேஞ்சர் ஜோனில் இருக்கின்றனர். இதில் பூர்ணிமா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த வார முதல் நாள் ஓட்டிங் லிஸ்ட் இதோ!

bb7-first-day-voting-list-cinemapettai

Also read: சினேகனுக்கு இருக்கிற அறிவில 10% கூட ஆண்டவருக்கு இல்லையா.? பிரதீப்பிற்காக கொந்தளித்த பிரபலம்

Trending News