வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அர்ச்சனாவின் முகமூடியை கிழித்தெறியும் லீலையின் மன்னன்.. சொதப்பலாக வரும் பிக் பாஸ் சீசன் 7

Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் என்னதான் முகமூடியை போட்டுக்கொண்டு பல நாட்களை கடந்து வந்தாலும், அதன் பின் அவர்களுடைய உண்மையான முகம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். அந்த வகையில் வைல்ட் கார்டு மூலம் போன அர்ச்சனாவின் கேரக்டர் இப்பொழுது தான் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதாவது அர்ச்சனாவின் மனநிலை தற்போது எப்படி இருக்கிறது என்றால், ஒவ்வொரு வீகண்டிலும் கமலஹாசன் தொகுத்து வழங்கும்போது அங்கு இருக்கும் மக்களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைக்கிறது. அத்துடன் அளவுக்கு அதிகமாக கைதட்டல்கள் கிடைப்பதினாலும் தன்னுடைய கேரக்டர் மற்றும் விளையாட்டின் போக்கு அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார்.

அதனால் எதற்கெடுத்தாலும் ஓவர் ஆட்டிட்யூட் காட்டிகிட்டு மற்றவர்களை குறை சொல்வது, சண்டை போடுவது என்று வழக்கமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார். அதிலும் தினேஷ் உடன் சேர்ந்துக்கிட்டு விசித்ரா மற்றும் மற்ற போட்டியாளர்களை கவுப்பதற்கு பிளான் பண்ணுவது போல் இவருடைய விளையாட்டு மாறிவிட்டது.

Also read: தளபதி 68 பட வாய்ப்பு பெற்ற பிக் பாஸ் பிரபலம்.. 18 வருடத்திற்கு பின் இணையும் கூட்டணி

இதனை அனைவருக்கும் தெளிவுபடுத்தும் விதமாக பள்ளிக்கூடம் டாஸ்கில் நிக்சன் அவருடைய ஒவ்வொரு பாயிண்ட்டையும் புட்டு புட்டு வைத்து விட்டார். அதாவது கோபமோ சண்டையோ எதுவாக இருந்தாலும் அதை காட்டி விட்டு உண்மையான பாசத்துடன் ஒற்றுமையாக பிக் பாஸ் வீட்டில் நாங்கள் அனைவரும் இருந்தோம். ஆனால் எப்பொழுது அஞ்சு பேர் புது எண்ட்ரியாக  நுழைந்தர்களோ அப்பொழுதே பிக் பாஸ் வீடு போர்க்களமாக மாறிவிட்டு சண்டை சச்சரவு  போடும்படியாக ஆகிவிட்டது.

இதை கேட்டதும் மாயா மற்றும் பூர்ணிமா சந்தோஷத்தில் நிக்சனை தூக்கி கொண்டாடுகிறார்கள். அத்துடன் விசித்ரா, மணி மற்றும் மற்ற போற்றியாளர்கள் நிக்சன் சொன்னது தான் கரெக்ட் என்பதற்கு ஏற்ற மாதிரி ரியாக்ஷன் கொடுத்து இருக்கிறார்கள். ஒரு நேரத்தில் லீலைகளை மட்டும் செய்து வரும் மன்னனாக நிக்சன் இருந்தார். ஆனால் எப்பொழுது ஐஸ்வர்யா வெளியே போனாரோ அப்பொழுது இவர் மட்டும்தான் பல இடங்களில் நியாயமான பதில்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் அர்ச்சனாவின் உண்மையான முகம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. என்ன இருந்தாலும் இந்த சீசன் சொதப்பிவிட்டது, அத்துடன் டைட்டில் வின்னருக்கு எந்த போட்டியாளருமே தகுதி இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் அவர்களுடைய கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Also read: பிக் பாஸ் துரத்திய உடனே பட வாய்ப்பு பெற்ற வாயாடி பெத்த மகள்.. வினோதமான கூட்டணி

Trending News