Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

28 நாளைக்கு வினுஷா, யுகேந்திரன் வாங்கிய சம்பளம்.. கண்ணம்மா தின்ன மிச்சருக்கு கொட்டிக் கொடுத்த பிக்பாஸ்

28 நாளைக்கு வினுஷா, யுகேந்திரன் வாங்கிய சம்பளம்.. கண்ணம்மா தின்ன மிச்சருக்கு கொட்டிக் கொடுத்த பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 7ல் எலிமினேட் ஆன வினுஷா தேவி, யுகேந்திரன் வாங்கிய மொத்த சம்பள விவரம்.

Bigg Boss Season 7: ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஸ்பெஷல். அந்த வகையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று வரிசையாக இரண்டு பேரை கமல் அதிரடியாக எலிமினேட் செய்தார். கடந்த வார நாமினேஷன் லிஸ்டில் உள்ளவர்களுக்கு மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான ஓட்டுகளை பெற்ற யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி இருவரும் எலிமினேட் செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் மொத்தமாக 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கின்றனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்ததன் மூலம் பிரபலமான வினுஷா தேவி இந்த சீசனின் ஸ்ட்ராங் கண்டஸ்டண்டாக இருப்பார் என நினைத்தனர். ஆனால் இவர் ரசிகர்கள் எதிர்பார்த்த எதையுமே பூர்த்தி செய்யவில்லை.

பிக் பாஸ் வீட்டில் சமையலம்மா போலவே வீட்டு வேலையை செய்து கொண்டு எந்த டாஸ்கிலும் சிறப்பாக விளையாடாமல் ஒப்பேத்தினார். இவர் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாளைக்கு இருப்பதற்கு மட்டும் 20000 சம்பளம் பேசப்பட்டது. அப்படிப் பார்த்தால் 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த வினுஷாவிற்கு 5 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் மிச்சர் தின்னதுக்கு மட்டும் கண்ணம்மாவிற்கு விஜய் டிவி இத்தனை லட்சத்தை வாரி இறைத்திருக்கிறதா! என பலரும் வாயைப் பிளக்கின்றனர். அதேபோல பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் நடிகருமான யுகேந்திரன் பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ஒரு நாளைக்கு 27 ஆயிரத்தை சம்பளமாக பெற்றுள்ளார்.

நேற்றுடன் 28 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த யுகேந்திரன் மொத்தமாக 7 லட்சத்து 56 ஆயிரத்தை மொத்த சம்பளமாக பெற்றிருக்கிறார். இவரும் பிக் பாஸ் வீட்டில், ‘தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு’ என்று இருந்திருக்கிறார். எந்த காரசாரமான விஷயத்தை செய்யவில்லை. இந்த ரெண்டு பீஸும் வேஸ்ட் பீசு என்று நினைத்து தான் பிக் பாஸ் ரசிகர்கள் இவர்கள் இருவரையும் வெளியேற்றி விட்டனர்.

அதேசமயம் புதிதாக ஐந்து வைல்டு கார்ட் போட்டியாளர்களாக சீரியல் நடிகை அர்ச்சனா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, கானா பாடகர் கானா பாலா, சீரியல் நடிகர் தினேஷ், தொகுப்பாளர் ஆர்ஜே பிராவோ ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். ஐந்து பேரையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வச்சு செய்கின்றனர். இனி தான் சீசன் 7 சூடு பிடிக்கப் போகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.