புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கதவு மூடாம பாத்ரூம் போறான், கெட்ட வார்த்தையில் அசிங்கமா பேசுறான்.. இன்று ஆண்டவர் கொடுக்க போகும் சாட்டையடி

Bigg Boss Tamil Season 7 | 4th November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக ஒளிபரப்பாகிறது. அதிலும் வீகென்ட் எபிசோடுகளில் பிக் பாஸ் போட்டியாளர்களை ஆண்டவர் வெளுத்து வாங்குவதால் அன்றைய நிகழ்ச்சிகள் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ஆகவே மாறிவிட்டது.

அதிலும் இந்த சீசனில் இதுவரை வந்ததில் மாஸான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கும் இந்த ப்ரோமோ தான். இந்த சீசனின் வெற்றியாளர் இவர்தான் என பலரும் யூகித்த பிரதீப்பின் ஆட்டம் தாங்காமல் மொத்த பிக் பாஸ் வீடே கொந்தளித்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு எதிராக முழு பிக் பாஸ் வீடே செங்கொடியை உயர்த்தி இருக்கிறது.

கடந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பின் அழுச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சமல்ல. ‘கெட்ட வார்த்தைகளை கோபத்தில் பேசினால் கூட பரவாயில்லை, தவறான நோக்கத்தில் பேசியது ரொம்பவே தப்பா இருக்குது’ என்று ஜோவிகா பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் பேண்டை கையில் போட்டுக்கொண்டு கமலிடம் நியாயம் கேட்டார்.

இவரைத் தொடர்ந்து விஷ பாட்டில் பூர்ணிமா, ‘பிரதீப்பால் இந்த வீட்டில் தூங்கவே பயமா இருக்குது’ என்றும் நிக்சன், ‘பிரதீப் பேசுவதை தவறு என்று கூட ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறார். நான் பேசுவது தப்பெல்லாம் கிடையாது, இப்படி தான் பேசுவேன் என்று திமிரு காட்டுகிறார்’ அவரைத்தொடர்ந்து ரவீனா, ‘ஒரு பெண் என்று கூட பார்க்காமல் என்னுடைய இடுப்பில் அணிந்திருந்த அரைஞாண் கயிறை குறித்து பிரதீப் அசிங்கமாக விமர்சிக்கிறார்’ என்றும் விஷ்ணு, ‘பிரதீப்பிடம் யாராவது ஏதாவது கேட்க நினைத்தால் அவர்களை அசிங்க அசிங்கமாக பேசி விடுவேன் என்று ஆப் செய்கிறார்’.

Also read: யாரு சாமி நீ, இப்படி ஒரு மூளையா.? கவினை அடித்தது ஏன், உண்மையை உடைத்த பிரதீப்

தொடர்ச்சியாக மணி, ‘இன்று கூட பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை அடைத்துக் கொள்ளாமல் திறந்து போட்டுக்கிட்டே டாய்லெட் போகிறார்’ என்று பிரதீப்பின் மீது ஹவுஸ் மேட்ஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆண்டவர், ‘இதற்கெல்லாம் என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என கோபத்துடன் பதில் அளித்தார்.

இன்னைக்கு பிரதீப்புக்கு சம்பவம் இருக்கு .சைக்கோ போல அவ்வப்போது நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டு சிரிக்கும் பிரதீப் கடந்த வாரம் கொஞ்சம் ஓவராகவே தான் ஆடினார். இதற்கெல்லாம் நிச்சயம் இன்று ஆண்டவர் சரியான சவுக்கடி கொடுக்கப் போகிறார். வன்முறையாக நடந்து கொண்டதற்காக விஜய் வர்மாவை ரெட் கார்ட் கொடுத்து எலிமினேட் செய்தது போல், பிரதீப்புக்கும் இன்று ரெட் கார்ட் கொடுக்கப் போகின்றனர்.

இன்று வெளியான மாஸான ப்ரோமோ!

Also read: டிஆர்பிக்காக பலியாடான போட்டியாளர்.. எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த பிக்பாஸ் எலிமினேஷன்

Trending News