பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு முறை வரும்போதும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை பார்க்கும் போது இவன் யாரு இவன நாம எங்கேயுமே பார்த்தது இல்லையே என்று நமக்கே சந்தேகம் வரும். ஒரு சிலரை கண்டவுடன் இந்த பையன் அந்த படத்தில் நடிச்சுருக்கான்..? இந்த பொண்ணு இந்த படத்தில் நடிச்சுருக்கா..? என்று நாமே கண்டுபிடித்து விடுவோம். சிலர் ஆள், அட்ரஸ் இல்லாமல் வந்து பெண்களின் கனவு நாயகனாக மாறியவர்தான் நடிகர் ஆரவ்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து பலரின் வாழ்வு நாசமாக போனதே தவிர ஒருவர் வாழ்வும் பெரிதாக பளிச்சிடும் அளவிற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வருபவர் அந்த நிகழ்ச்சிக்கு பின், வெளியில் தெரியாமல் போய் விடுகிறார். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் வந்து நாம் பார்த்து வியந்த ஒரு மனிதர் தான் ஆரவ். இப்படி ஒரு மனிதரா என்று பார்த்து வியந்த ஆரவ், அதன் பின் எங்கு சென்றார்..? என்ன செய்து கொண்டிருக்கிறார்.? என்று யாருக்கும் தெரியாது. ஒரு படம் நடித்தார் அதுவும் திரைக்கு வந்ததா என்று கூட யாருக்கும் தெரியவில்லை.
இப்படி இருக்கையில் நடிகர் ஆரவ் அவர்கள், தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்திருக்கிறார். அர்னால்டு போல உடம்பை ஏற்றி மிரட்டும் தோணியில் வல்லவராக இருக்கிறார்.சினிமாவிற்கு வாய்ப்பு தேடுவதற்காக தான் பலர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கையில் சினிமா வாய்ப்புக்காக அவர்கள் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 100 நாள் படும் அவஸ்தை நம் அனைவருக்கும் தெரியும்.
அப்படி அவஸ்தை பட்டு வந்தாலும் அவர்களுக்கான சரியான அங்கீகாரமும் சினிமா வாய்ப்பு கிடைப்பதில்லை. அதனால் இது போன்ற சில விஷயங்களை செய்து போட்டோ ஷூட் செய்து வெளியிட்டால் மட்டுமே அவர்களால் சினிமா வாய்ப்பை பெற முடியும் என்று நினைத்து இது போன்று செய்து வருகின்றனர். இருந்தாலும் ஆரவ் செய்த இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.
அவரின் உடலில் உள்ள கட்டுகள் கண்டிப்பாக அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு மாத காலமாக தொடர்ந்து மேற்கொண்ட உடற்பயிற்சியினால் இவர் இந்த மாதிரியான விஷயத்தை செய்து இருக்கிறார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி, அதன் பிறகு மீண்டு வந்து இந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இப்படி மாறி இருப்பதாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் .
உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றுதான் இப்படி செய்ததாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த போஸ்டை தீயாக அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.