வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

விஜய் சேதுபதிக்கு எதிராக போர் கொடியை தூக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. தனக்குத்தானே சூனியம் வைத்த விஜய் டிவி

Vijay tv Bigg boss 8 Tamil vijay sethupathi: பொதுவாக பிக் பாஸ் என்கிற ஒரு நிகழ்ச்சி தமிழில் இவ்வளவு தூரம் பிரபலமானதற்கு முக்கிய காரணம் கமல் தொகுத்து வழங்கியதால் மட்டும்தான். அதனால் தான் ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. ஆனால் கடைசி சீசனில் கமலுக்கு கிடைத்த சில நெகட்டிவ் விமர்சனங்களால், தொடர்ந்து இனி நான் தொகுத்து வழங்குவதில்லை கொஞ்சம் பிரேக் விடுகிறேன் என்று ஒரு அறிவிப்பை கமல் கொடுத்திருந்தார்.

அந்த சூழ்நிலையில் இவருக்கு பதிலாக வேறு யார் தொகுத்து வழங்க முடியும் என்ற கேள்வியில் பல பிரபலங்கள் பெயர் அடிபட்டது. ஆனால் கடைசியில் கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி அவருடைய எதார்த்தமான பாணியில் தொகுத்து வழங்குவார் என்று விஜய் டிவி ப்ரோமோவை வெளியிட்டது. அதன்படி விஜய் சேதுபதி எப்படி போட்டியாளர்களை வழிநடத்துவார், மக்களின் குரலுக்கு எப்படி செவி சாய்ப்பார் என்பதை பார்ப்பதற்கு முதல் வாரம் மக்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

அதன்படி முதல் வாரம் விஜய் சேதுபதியின் எதார்த்தமான பேச்சு மக்களுக்கு பிடித்திருந்தது. ஆனால் போகப்போக எதார்த்தம் என்கிற பெயரில் தெனாவட்டுடன் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை மட்டம் தட்டி அடக்குவது போல் வன்முறையாக தெரிந்தது. அது மட்டுமில்லாமல் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு மரியாதை கொஞ்சம் கூட கொடுக்காமல் அவர்களை ஏளனமாக நடத்தி அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்க கூட இல்லாமல் அடக்கி விடுகிறார்.

அதாவது விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடம் ஒரு கேள்வி கேட்பார். அதற்கு பதில் சொல்லும் விதமாக அவர்கள் சொல்ல வருகையில் இவ்வளவு தூரம் விளக்க வேண்டாம் நீங்க உட்காருங்க என்று அசிங்கப்படுத்தி விட்டுருவார். அதிலும் ஒரு பிரச்சினையை முடிப்பதற்கு பதிலாக அதை டுவிஸ்ட் பண்ணி விட்டு கடைசி வரை அதற்கு ஒரு தீர்வு கிடைக்காத அளவிற்கு அந்த பிரச்சினையை குளறுபடி ஆக்கி விடுவார்.

இப்படித்தான் விஜய் சேதுபதி பிக் பாஸ் தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே உள்ளிருக்கும் போட்டியாளர்கள் கொஞ்சம் விறுவிறுப்பு இல்லாமல் விளையாடிக் கொண்டு வருகிறார்கள். அதிலும் விஜய் சேதுபதியின் பேச்சு ரொம்பவே எரிச்சல் ஊட்டும் விதமாக ஒவ்வொரு வாரமும் முடிவடைகிறது. அந்த வகையில் முடிந்துபோன கடைசி வாரத்தில் அருணுக்கு கிடைத்த சொம்பு தூக்கி பட்டதை யாருக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அருண் அவருடைய தெளிவான பதிலை சொல்லும் விதமாக இங்கே ஆண்கள் அணியில் இருப்பவர்கள் யாரும் சொம்பு தூக்கவில்லை. அதனால் யாருக்கும் கொடுக்க விருப்பமில்லை என்று சொல்லிய பட்சத்தில் அப்படி என்றால் நீங்கதான் சொம்பு தூக்கி வச்சுக்கோங்க என்று ரொம்பவே அசிங்கப்படுத்தும் அளவிற்கு மட்டம் தட்டி உட்கார வைத்து விட்டார். அந்த நேரத்தில் அருண் முகத்தை பார்க்கும் பொழுது கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது.

என்ன இருந்தாலும் சக மனிதர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கமல் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தெள்ளத் தெளிவாக இருக்கும். அதில் கால்வாசி கூட விஜய் சேதுபதிக்கு இல்லை. போட்டியாளர்கள் என்பதையும் தாண்டி சக மனிதர்கள் என்ற அடிப்படையில் கூட விஜய் சேதுபதி யாரையும் பார்க்க மாட்டார். இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராக சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது அருணுக்கு நடந்தது நியாயம் இல்லை என்று சொல்லும் விதமாக விஜய் சேதுபதிக்கு எதிராக போர்க்கொடியை பிக் பாஸ் டைட்டில் வின்னர் தூக்கிருக்கிறார். அவர் வேறு யாருமில்லை கடந்த சீசனில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற அர்ச்சனா. இவர் அருணின் நெருங்கிய நண்பராக இருந்தாலும் விஜய் சேதுபதி செய்தது தவறு என்று சொல்லி Stand by arunprasad என்ற ஹேஸ் டேக்கை பதிவிட்டு இருக்கிறார்.

ஆமாம் இவர் சொல்வது சரிதான் என்று சில ரசிகர்களும் அருணுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இது அருணுக்கு மட்டும் அல்லாமல் அங்கு இருக்கும் சில போட்டியாளர்களிடமும் விஜய் சேதுபதி இப்படித்தான் நடந்து கொள்கிறார். எதார்த்தம் என்கிற பெயரில் விஜய் சேதுபதி அவருடைய பெயரை கெடுத்தது மட்டுமில்லாமல் விஜய் டிவியின் பெயரையும் கெடுக்கும் அளவிற்கு தொகுத்து வருகிறார். ஏற்கனவே சமீபத்தில் முடிந்து போன குக் வித்து கோமாளி சொதப்பிவிட்டது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியும் சொதப்பிவிட்டால் விஜய் டிவிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்.

Trending News