வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

விஜய் சேதுபதியை நோஸ்கட் பண்ணி திமிராக பேசிய விஷால்.. மன்னிப்பு கேட்க மறுத்ததால் பிக் பாஸ் எடுத்த முடிவு

Vijay Tv Bigg Boss 8 Tamil: ஒவ்வொரு பிக்பாஸ் சீசன்களிலும் ஏதாவது ஒரு பிரச்சனை பூகம்பமாக வெடித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்பொழுது விஜே விஷால் ஒரு சர்ச்சைக்குள் மாட்டியிருக்கிறார். அதாவது இவரை பொறுத்தவரை நேரடியாக யாரை பற்றியும் குறை சொல்லாமல் மறைமுகமாக புறணி பேசுவது, அவர்களை மட்டம் தட்டி நக்கல் அடிப்பது என்று சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு சில விஷயங்களை செய்து வருகிறார்.

அந்த வகையில் சௌந்தரவை பற்றி கொஞ்சம் தர குறைவாக பேசி கேரக்டரை அசிங்கப்படுத்தும் விதமாக ஆண்கள் அணியிடம் பேசி விட்டார். அத்துடன் முத்துக்குமாரனிடமும், சௌந்தர்யா நோக்கம் சரியில்லை செயல்கள் சரியில்லை என்று அவதூறான பேச்சுக்களை பேசி சில போட்டியாளர்கள் மனதில் ஒரு கெட்ட எண்ணத்தை திணிக்கும் விதமாக விஷால் தவறான கருத்துக்களை திணித்துவிட்டார்.

ஆனாலும் விஷால் சொன்னதுக்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் முத்துக்குமாரும் ஆமாம் சௌந்தர்யா அப்படித்தான் என்பதற்கு ஏற்ப பேசி விட்டார். அதிலும் ஆண்கள் மட்டும் தான் கண்ணியமானவர்கள் என்பதற்கு ஏற்ப முத்துக்குமாரின் பேச்சு இருந்தது. இதற்கெல்லாம் முக்கிய காரணமாக இருக்கும் விஷால் பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று விஜய் சேதுபதி மறைமுகமாக விஷாலை எழுப்பி நீங்கள் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறுகிறார்.

ஆனால் விஷால் ரொம்ப தெனாவட்டா பேசி ஆர்க்யூ பண்ண ஆரம்பித்து விட்டார். அதற்கு விஜய் சேதுபதி நீங்கள் செய்தது தவறு தான். அதை திருத்தும் விதமாக நீங்கள் மன்னிப்பு கேட்டு விட்டால் பிரச்சினை சரியாகிவிடும் என்று சொல்கிறார். ஆனால் விஷால் என்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. நான் பார்த்தது தான் சொன்னேன் என்று விஜய் சேதுபதியை நோஸ்கட் பண்ணும் அளவிற்கு திமிராக பேசுகிறார்.

ஏற்கனவே விஷாலின் நடவடிக்கையும் பேச்சும் பார்க்கும் மக்களுக்கு கொஞ்சம் வெறுப்பாக இருக்கிறது. அந்த வகையில் சௌந்தரவை பற்றி தவறான கருத்துக்களை பேசிய விஷாலை தட்டி கேட்ட விஜய் சேதுபதியையும் மதிக்கவில்லை என்பதால் விஜய் டிவி சேனல் தரப்பில் இருந்து விஷாலுக்கு yellow card(மஞ்சள் அட்டை) கொடுக்கலாம் என முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. ஓவர் தலைக்கணத்தில் ஆடும் விஷாலுக்கு பிக் பாஸ் கொடுக்கும் பதிலடியாக இருக்கப் போகிறது.

Trending News