ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக்பாஸ் அல்டிமேட்டில் முதலில் வெளியேறப் போவது இவர்தான்.. இவர் பெரிய சகுனி ஆச்சே!

இப்போதுதான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்தது. அந்த சீசனில் ராஜு முதல் பரிசை தட்டிச் சென்றார். அது முடிந்த அடுத்த வாரமே ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் 75 நாட்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை நடந்த இந்த சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே சீசனில் களம் இறக்கி காட்டி வருகிறது ஹாட்ஸ்டார் நிறுவனம். ஆரம்பத்திலேயே அடிதடி சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் தான் சென்று கொண்டிருக்கிறது.

வனிதா, அனிதா, ஜூலி, பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி என ஒவ்வொரு போட்டியாளர்களும் நெருப்பு மாதிரி விளையாண்டு வருகின்றனர். எப்பொழுதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் எழிமினேஷன் இருக்காது. ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வெறும் 75 நாட்கள் தான் என்பதால் முதல் வாரத்தில் இருந்தே எழிமினேஷன் நடைபெற உள்ளன.

அந்த வகையில் முதல் போட்டியாளராக வெளியேறப் போவது சுரேஷ் சக்ரவர்த்தி தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு சமீபத்தில் தான் போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து சகுனி என்ற பட்டத்தை கொடுத்தனர்.

எப்பொழுதுமே முதலில் எழிமினேஷன் ஆவது அந்த வீட்டில் வயதானவர்கள் யாராவது இருந்தால் அவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் கடைசி வரையில் அபிநய் தான் முதலில் வெளியேறுவார் என்ற தகவல் வெளிவந்த நிலையில் தற்போது திடீர் டிவிஸ்ட்டாக சுரேஷ் சக்ரவர்த்தி வெளியாகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

நாளுக்கு நாள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட சுவாரசியமான விஷயங்கள் நடந்து வருவதால் இந்த நிகழ்ச்சி மக்கள் வட்டாரத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அந்தவகையில் ஹாட்ஸ்டார் இருக்கும் முதல் முயற்சியே வெற்றிகரமாக அமைந்துள்ளது.

Trending News