Vijay Tv Bigg Boss 8 Tamil: ஒருவர் இல்லாத பொழுது தான் அவர்களுடைய அருமை தெரியும் என்பதற்கு ஏற்ப இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலுக்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து நெடிசன்கள் வச்சு செய்யும் அளவிற்கு இணையதளத்தில் கமலஹாசன் இமேஜை டேமேஜ் பண்ணினார்கள். அதனாலேயே என்னமோ பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்கு பிரேக் விடுகிறேன் என்று கமல் விலகிவிட்டார்.
அவருக்கு நன்றாகவே தெரியும் அவருடைய பேச்சுக்கு முன் வேறு யாராலும் வர முடியாது என்று. அதனால் தான் ஒரு நிகழ்ச்சியை விட்டு ஒதுங்கிப் பார்ப்போம். என்ன நடக்குது என்று மக்களுக்கு நன்றாக புரிந்துவிடும் என்பதற்காக செய்த விஷயம் தான் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொகுத்து வழங்காமல் ஒதுங்கி விட்டார். இந்த சூழ்நிலையில் இவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
ஆரம்பத்தில் விஜய் சேதுபதி ஒரு எதார்த்தமான பேச்சாளர் நிச்சயம் போட்டியாளர்களுக்கு ஏற்ற மாதிரி விஷயங்களை டக்கு டக்குனு பேசி மக்களின் குரலாக பிரதிபலிப்பார் என்று அனைவரும் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். ஆனால் போகப் போக எந்த விஷயத்தை தட்டிக் கேட்கணுமோ அதை ஜவ்வு மாதிரி இழுத்து பிளேடு போடும் அளவிற்கு தட்டு தடுமாறி வருகிறார்.
எப்படி ஒரு விஷயத்தை கையாளுவது என்று தெரியாமல் நாளா பக்கமும் சுத்தி போட்டியாளர்களை மட்டும் இல்லாமல் பார்ப்பவர்களையும் போரடிக்கும் வகையில் தொகுத்து வழங்கி வருகிறார். உதாரணத்திற்கு நேற்று தொகுத்து வழங்கிய பொழுது சாட்சினாவிடம் கேட்ட ஒரு குழம்பு பாத்திரம் முதல் கொண்டு மஞ்சரி தீபக் விஷயம் வரை என்ன பேசுவது என்று அவருக்கு தெரியாமல் உளறி அனைவரையும் சுற்றலில் விட்டார்.
இப்படியே போனால் பிக் பாஸ் இருக்க இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். அதனால் வந்ததற்காக ஏதாவது செய்யணும் என்பதற்காக இந்த ஒரு சீசனை மட்டும் முடித்துவிட்டு போய்விடலாம் என விஜய் சேதுபதி முடிவெடுத்துவிட்டார். விஜய் டிவி சேனலும் அதற்கேற்ற மாதிரி தயாராகி விட்டார்கள். அந்த வகையில் இந்த இடத்தை கமலை தவிர வேறு யாராலும் நிரப்ப முடியாது என்று கமலுக்காக மட்டுமே இந்த இடம் என்பதற்கு ஏற்ப அனைவரும் கமல் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையில் உள்ளே இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் கடந்த வாரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு என்று தனியாக போட்டிருந்த கோட்டை அழித்ததற்கு பிறகு அவர்களுடைய தனிப்பட்ட விளையாட்டை விளையாண்டு விறுவிறுப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் டாப் 5 இடத்திற்கு யார் வருவார்கள் என்பதை யூகிக்க முடியும் அளவிற்கு சில போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் முத்துக்குமார், ஜாக்குலின், சௌந்தர்யா, விஷால் மற்றும் பவித்ரா. மேலும் இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்றால் அதிகபட்சமான வாய்ப்பு முத்துக்குமாருக்கு தான் இருக்கிறது. அத்துடன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு சாட்சினா வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மிகப்பெரிய ஏமாற்றமாக சிவக்குமார் எலிமினேட் ஆகி போய்விட்டார்.