Bigg Boss Vikraman: கடந்த பிக் பாஸ் சீசன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவை பெற்ற விக்ரமன், தற்போது மிகப்பெரிய புகார் ஒன்றில் சிக்கி இருக்கிறார். லண்டனில் சட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் விக்கிரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில மாதங்களுக்கு முன் அவர் மீது குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார்.
அதன் பின்னர் அமைதியாக இருந்த இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாக வெடித்திருக்கிறது. வழக்கறிஞர் கிருபா முனுசாமி விக்ரமன் தன்னிடம் பணம் வாங்கியது மற்றும் அவர்கள் இருவருடைய உரையாடல்கள் என அத்தனை ஆதாரங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததோடு, விக்ரமனுக்கு இதுபோன்று 15 பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாகவும் அனைவரையுமே அவர் ஏமாற்றி விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.
Also Read: ஊருக்கு முன் உத்தமன் வேஷம் போட்ட பிக்பாஸ் விக்ரமன்.. போட்டோ ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய காதலி
இந்த நிலையில் இன்று விக்ரமன் கிருபாவின் புகாருக்கு எதிராக மௌனம் கலைத்திருக்கிறார். தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு சில ஆதாரங்களையும் வெளியிட்டு இருக்கிறார். நெட்டிசன்கள் பலர் இவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், ஒரு சிலரோ விக்ரமன் மீது குறையும் சொல்லி வருகின்றனர். ஏற்கனவே மீரா மிதுன் பிரச்சனையை வெளிக்கொண்டுவந்த ஜோ மைக்கேல் என்பவர் இந்த சர்ச்சையில் விக்கிரமனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கமெண்ட்டும் செய்திருக்கிறார்.
விக்ரமன், கிருபா தன் கைப்பட எழுதிய கடிதம் என்று ஒரு நான்கு பக்க கடிதத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் விக்ரமனுக்கு இந்த காதலில் விருப்பமே இல்லை என்பது போலவும், ஆரம்பத்தில் நன்றாக பேசி வந்த அவர் அதன் பின்னர் கிருபாவுடன் பேச்சை குறைத்துக் கொண்டதாகவும், கிருபா தான் அவரை மறக்க முடியாமல் காதலில் உருகி வருவது போலவும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
விக்ரமன் பகிர்ந்திருக்கும் கடிதம்
![letter](https://www.cinemapettai.com/wp-content/uploads/2023/07/letter.webp)
மேலும் தன்னிடம் விக்ரமன் பணம் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக கிருபா சொல்லிய குற்றச்சாட்டுக்கு பதிலடியாக ரூபாய் 12 லட்சத்தை விக்ரமன் திருப்பி அனுப்பிய காசோலையின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார். தனக்கு பிக் பாஸ் சம்பளம் வந்த பிறகு கிருபாவிடம் வாங்கிய பணம் மொத்தத்தையும் கொடுத்து விட்டதாக அவர் சொல்லி இருக்கிறார். அவர் அனுப்பி இருக்கும் தேதியின் அடிப்படையில் பார்த்தால் கிருபா புகார் கொடுத்த பிறகுதான் இவர் காசை திருப்பி அனுப்பி இருக்கிறார்.
12 லட்சத்தை விக்ரமன் திருப்பி அனுப்பிய காசோலையின் புகைப்படம்
![cheque](https://www.cinemapettai.com/wp-content/plugins/gumlet/assets/images/pixel.png)
விக்ரமன் மீது அவர் சார்ந்த கட்சியில் இருந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கிருபா நேற்று சொல்லி இருந்த நிலையில், தான் சார்ந்த கட்சியின் தலைவரை முதுகெலும்பு இல்லாதவர் என விக்ரமன் மற்றொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஸ்கிரீன் ஷாட் தற்போது அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இனி இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி ஆதாரங்களின் மூலம் சோசியல் மீடியாவில் சண்டையிட்டுக் கொள்வார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
Also Read: பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்