திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு.. சர்வாதிகாரியான நிக்சன், என்ன கொடுமை சார் இது.!

Biggboss 7: இதுவல்லவோ டாஸ்க் என பிக்பாஸ் ஆடியன்ஸ் இப்போது சுவாரஸ்யமாகி இருக்கின்றனர். அதாவது இந்த வாரம் பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது. அதை ஆட்சி செய்யும் பொறுப்பு இப்போது கேப்டன் நிக்சன் கைக்கு வந்திருக்கிறது.

அவருடைய சர்வாதிகார ஆட்சியை தான் நாம் இந்த வாரம் முழுவதும் பார்க்க போகிறோம். ஏற்கனவே ஐஸ்வர்யா தத்தா சர்வாதிகார ஆட்சி செய்து தாடி பாலாஜி மீது குப்பையை கொட்டியதை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதைத்தான் இந்த அரசரும் ஃபாலோ செய்ய இருக்கிறார்.

Also read: என் மூஞ்ச கூட பாக்க தோணலையா.? இந்துஜாவால் அழுது புலம்பும் பூர்ணிமா, காரணம் இதுதான்

அதற்கான ப்ரோமோ தான் இப்போது வெளியாகியிருக்கிறது. அதில் மன்னனாக பொறுப்பேற்று இருக்கும் நிக்சனுக்கு போட்டியாளர்கள் தகுந்த மரியாதை கொடுக்கின்றனர். உடனே அவர் சரவண விக்ரம், ஜோவிகா, ரவீனா மூன்று பேரையும் மழையில் முட்டி போட வைத்து தன் அதிகாரத்தை காட்டுகிறார்.

மேலும் தன்னை எதிர்ப்பவர்களை சிறையில் தள்ளுவது, கடுமையான தண்டனை கொடுப்பது என நிக்சன் ஹிட்லர் ரேஞ்சுக்கு மாறி இருக்கிறார். ஆனாலும் அதை பார்க்கும் போது கொஞ்சம் நகைச்சுவையாக தான் இருக்கிறது.

Also read: ரீலு அந்து போச்சு கிளம்புங்க காத்து வரட்டும்.. பிக்பாஸை விட்டு வெளியேறும் டம்மி பீஸ், தீயாய் பரவும் ஓட்டிங் லிஸ்ட்

இப்படியாக ஒரு பொழுதுபோக்குக்கு தயாராகி இருக்கும் பிக்பாஸ் வீடு எந்த அளவுக்கு சுவாரஸ்யத்தை தரும் என்பது இன்றைய எபிசோடில் தெரிந்துவிடும். மேலும் வில்லாதி வில்லன்களாக வீட்டில் இருக்கும் கூட்டத்தை நிக்சன் தன்னுடைய கொடுங்கோல் ஆட்சியால் சமாளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending News