Biggboss 8: இப்ப தான் பிக்பாஸ் வீடு களை கட்டுது. இந்த வாரம் சூப்பர் டாஸ்கை கொடுத்த பிக்பாஸ் ஏகப்பட்ட கண்டன்டுகளை இன்று அள்ளி இருக்கிறார். அதிலும் வழக்கமாக ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு ப்ரோமோக்கள் தான் வரும்.
ஆனால் இன்று காலை 12 மணிக்கு முன்பே நான்கு ப்ரோமோ வந்துவிட்டது. அத்தனையிலும் போட்டியாளர்களின் உண்மை முகம் தோலுரிக்கப்பட்டு இருந்தது. சாத்தானும் தேவதைகளும் அடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் டாஸ்க்.
ஆனால் இங்கு சாத்தான் கூட்டமே ஒருவருக்கொருவர் அடித்து வீட்டை கலவரம் ஆக்கி வருகின்றனர். அதிலும் நான்காவதாக வெளிவந்த ப்ரோமோவில் அன்சிதா தன் பொறுமையை இழந்து கதவை திற நான் வீட்டுக்கு போகணும் என கத்த ஆரம்பித்து விட்டார்.
பிக்பாஸ் கொடுத்த டாஸ்கால் கலவரமான வீடு
இதற்கு காரணம் தேவதைகளை வெறுப்பேற்ற வேண்டும் என டெவில் கூட்டம் கீழே இருந்த சாக்லேட்டை எடுத்து தேவதை வாயில் வைத்து விட்டனர். இதை செய்தது நம் சாச்சமா தேவி தான்.
இதனால் உச்சகட்ட கடுப்பான அன்சிதா நீ உண்மையிலேயே சாத்தான் தான். குட்டி பிசாசு என திட்ட ஆரம்பித்து விட்டார் அவர் சொன்னதிலேயே குட்டி பிசாசு என்ற வார்த்தை தான் அவருக்கு அப்படியே பொருந்துகிறது என ரசிகர்களும் ஃபயர் வீட்டு வருகின்றனர்.
இப்படி நிகழ்ச்சி கலவரமாக இருப்பதை பார்த்த ஆடியன்ஸ் உடனடியாக லைவ் எபிசோடை காண உட்கார்ந்து விட்டனர். ஆக மொத்தம் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு கேட்பதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. அதை அவர் விக்ரம் பட சந்தானமாக மாறி கேட்டால் சுவாரஸ்யமாக இருக்கும்.