சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

செய்றதெல்லாம் செஞ்சிட்டு நீலி கண்ணீரா வடிக்கிற.. பிக்பாஸ் ஆடியன்சை காண்டாக்கிய ட்ராமா குயின்

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்றாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் நேற்றுதான் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டு பார்வையாளர்களை சுவாரஸ்யம் ஆக்கி இருக்கிறது பிக்பாஸ் டீம்.

அதன்படி நேற்று கொடுக்கப்பட்ட காயின் டாஸ்க்கில் ஆண்கள் அணி வென்றது. ஆனால் அதுவே இப்போது சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. மல்யுத்தம் செய்வதுபோல் இரண்டு அணிகளும் முட்டி மோதி தங்கள் திறமையை காட்டினார்கள்.

ஆனால் பொதுவாக ஆண்களை விட பெண்கள் உடல் வலிமையில் கொஞ்சம் குறைவுதான். அதனால் விளையாட்டில் சில விதிமுறைகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாத நிலையில் நேற்று பெண்கள் ரொம்பவே சிரமப்பட்டார்கள்.

அதிலும் முத்து சுனிதாவின் போராட்டத்தை பார்க்கும் நமக்கே கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அந்த அளவுக்கு சுனிதாவை லாக் செய்தது ஆண்கள் அணி. இப்படி பெண்கள் அணிக்கு நிறைய சேதாரம் ஏற்பட்டது.

அதேசமயம் ஆண்களுக்கும் சில சங்கடங்கள் வந்தது உண்மைதான். அதிலும் ரஞ்சித் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டார். அவரை படக்கூடாத இடத்தில் தாக்கிய தர்ஷாவை அருண் இனி இப்படி செய்யாதே என தன்மையாக சொன்னார்.

ஓவர் சீன் போடும் தர்ஷா குப்தா

அவர்கள் என்னவோ சொன்னது ஒரு முறை தான். ஆனால் அதையே பிடித்துக் கொண்ட டிராமா குயின் அழுது சீன் போட்டு அனைவரையும் கடுப்பேற்றி விட்டது. வீட்டில் இருந்த ஜாக்லின் கூட இதனால் காண்டாகி அவரை திட்டினார்.

அதேபோல் தான் பார்வையாளர்களும் அந்த வீடியோவை வைரல் செய்து மூன்று முறை ரஞ்சித்தை அவர் தாக்கியிருக்கிறார். ஆனால் எதுவுமே தெரியாதது போல் இந்த பொண்ணு சீன் போடுது. ஆனால் ரஞ்சித் பெருந்தன்மையாக அதை விட்டுவிட்டார்.

ஆனாலும் ஒரே விஷயத்தை பிடித்து பிரச்சனையை பெரிதாக்கும் தர்ஷாவை முதலில் வீட்டை விட்டு வெளியில் அனுப்புங்கள். அப்பொழுதுதான் மற்றவர்கள் விளையாட்டை ஒழுங்காக விளையாட முடியும் என ரசிகர்கள் கோபத்தோடு கூறி வருகின்றனர்.

ஏற்கனவே இந்த வார நாமினேஷனில் இருக்கும் தர்ஷாவுக்கு குறைந்த ஓட்டுகள் தான் கிடைத்தது. அதில் இப்படியெல்லாம் அவர் அழுது சீன் போடுவது அவருக்கே பின் விளைவை ஏற்படுத்தி உள்ளது.

Trending News