சௌந்தர்யாவை கட்டம் கட்டிய ஹவுஸ் மேட்ஸ்.. சுனிதாவுக்கு ஆட்டம் காட்டிய சவுண்ட்

sunitha-biggboss
sunitha-biggboss

Biggboss 8: இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறி இருக்கிறது. ஒரு நாள் பெண்கள் அணி ஊழியர்களாகவும் மறுநாள் ஆண்கள் அணி ஊழியர்களாகவும் இருந்தனர்.

இதில் சில மனக்கசப்புகள், சுவாரஸ்யம், என்டர்டைன்மென்ட் என அனைத்தும் இருந்தது. அதை அடுத்து மூன்றாவது நாளான இன்று மொத்த போட்டியாளர்களும் இரண்டாக பிரிகின்றனர்.

அதில் சிறப்பாக வேலை செய்தவர்கள் கெஸ்ட் ஆக வருவார்கள். அதே போல் மோசமாக பெர்பார்ம் செய்தவர்கள் ஹோட்டல் ஊழியர்களாக இருப்பார்கள். அதில் சௌந்தர்யா மேனேஜராக இருக்கிறார்.

சவுண்டு சௌந்தர்யாவின் திடீர் ஆட்டம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அவரை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கட்டம் கட்டுகின்றனர். ஆனால் அவர் எதற்கும் அசராமல் பதில் கொடுத்து தன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார். இது ஒரு பக்கம் கடுப்பாக இருந்தாலும் ஒரு பக்கம் ஃபயராகவும் உள்ளது.

அதில் எல்லா இடத்திலும் நானே இருக்கணும்னு சொன்னீங்கன்னா ஆவியா தான் இருக்கணும் என்கிறார். அதேபோல் சுனிதா எது சொன்னாலும் பதிலுக்கு எதையாவது சொல்லி அவர் வாயை அடைத்து விடுகிறார்.

இதனால் சுனிதா கடுப்பாவது போல் ப்ரோமோ வந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக வீட்டில் இருக்கிறாரா என்று தெரியாமல் இருந்த சௌந்தர்யா இந்த வாரம் ஃபுல் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.

நேற்று ஜாக்லினிடம் சண்டை கட்டியதில் தொடங்கி இன்று சுனிதாவை டார்கெட் செய்துள்ளார். அதேபோல் ஆண்கள் அணியையும் அவர் வீட்டு வைக்கவில்லை. இந்த வாரம் அவர் நாமினேஷனில் இருக்கும் நிலையில் அதிலிருந்து தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement Amazon Prime Banner