வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஜாக்லினை அசிங்கப்படுத்திய சவுண்ட் சௌந்தர்யா.. இந்த வாரம் ஒரு சம்பவம் இருக்கு

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துள்ளது போல் தோன்றுகிறது. இரு அணிகளாக பிரிந்துள்ள போட்டியாளர்கள் தற்போது புதுவிதமான யுக்திகளை கையாள தொடங்கி இருக்கின்றனர்.

நேற்று நடந்த காயின் டாஸ்க் சரியோ தவறோ இரண்டு டீமும் டஃப் கொடுத்து விளையாடினார்கள். இது சில விமர்சனங்களுக்கு ஆளானாலும் இப்படியே கடினமான டாஸ்க் கொடுங்கள் பிக்பாஸ் என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

அதேபோல் இந்த வாரம் பிக் பாஸ் வீடு ஹோட்டலாக மாறி இருக்கிறது. அதன்படி நேற்று பெண்கள் அணி இந்த ஹோட்டலை நடத்தினார்கள். அதில் ஆண்கள் செய்த அட்டூழியம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அதைத்தொடர்ந்து இன்று ஆண்கள் அணி ஹோட்டலை நடத்துகின்றனர். அதில் தான் தற்போது ஒரு பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. அதாவது சவுண்டு சௌந்தர்யா மேனேஜர் முத்துவிடம் சப்பாத்தியில ஒரே உப்பா இருக்கு.

பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை

இதை சாப்பிட்டா எனக்கும் இவங்க மூஞ்சி மாதிரி ஆயிடும் என ஜாக்லினை காட்டுகிறார். இதனால் கடுப்பான ஜாக்லின் காமெடிக்காக கூட இப்படி சொல்லாத எனக்கு பிடிக்கல என சொல்கிறார்.

மேலும் கொஞ்சம் கவனத்தோடு இரு சௌந்தர்யா என சாதாரணமாகத்தான் சொல்கிறார். ஆனால் நமது சவுண்டு அது எப்படி என்ன பார்த்து கவனமாக இருன்னு சொல்லலாம் என எகிறி கொண்டு சண்டைக்கு பாய்கிறார்.

ஏற்கனவே இவருக்கு பெண்கள் அணியை விட ஆண்கள் டீம் தான் சௌகரியமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த பேச்சாக கூட இருக்கலாம். இரண்டு வாரங்களாக மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த சௌந்தர்யா தற்போது உண்மை முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து அவருக்கு ஆதரவாக இருந்த ஜாக்லினை அவர் உருவ கேலி செய்தது நிச்சயம் பஞ்சாயத்தாக வெடிக்கும். ஆக மொத்தம் இருக்கு இந்த வாரம் விஜய் சேதுபதியிடம் ஒரு சம்பவம் இருக்கு.

Trending News