வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது யார்.? ஓட்டுக்காக கன்டென்ட் டிராமாவை ஆரம்பித்த தலைவன்

Biggboss 8 Voting: பிக்பாஸ் சீசன் 8 வெற்றிகரமாக ஆரம்பமாகி விட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒரே நாளில் எலிமினேஷன் என்ற விதியின் படி சாச்சனா வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில் ஆறு பேர் இருக்கின்றனர். அதன்படி சௌந்தர்யா, முத்துக்குமரன், ரவீந்தர், ரஞ்சித், ஜாக்குலின், அருண் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இதில் முதல் இடத்தை பிடித்தது யார்? கடைசி இடத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்? என்பதை காண்போம். அதன்படி தற்போதைய ஓட்டிங் நிலவரத்தில் 21% மேல் வாக்குகளை பெற்றிருப்பது சௌந்தர்யா தான். முதல் நாளிலேயே அவருடைய குரலை வைத்து சக போட்டியாளர்கள் கிண்டல் செய்தனர்.

அதுவும் இவருக்கு கிடைத்துள்ள ஆதரவுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் முத்துக்குமரன் இருக்கிறார். அடுத்தடுத்த இடங்களை ரஞ்சித், ஜாக்குலின், அருண் ஆகியோர் பெற்றுள்ளனர்.

பிக்பாஸ் ஓட்டிங் தற்போதைய நிலவரம்

கடைசி இடத்தில் இருக்கும் ரவீந்தர் 13% வாக்குகளை பெற்றுள்ளார். இதனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார் என தெரிகிறது. ஆனாலும் இன்னும் இரு தினங்கள் இருப்பதால் ஓட்டிங் நிலவரம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

bb8-voting
bb8-voting

ஏனென்றால் இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இடையே பெரும் சண்டை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அடிதடி அளவுக்கு வந்துள்ள இந்த பிரச்சனை நிச்சயம் ஒரு கன்டென்ட் டிராமாவாக இருக்கலாம்.

எப்படி என்றால் இதன் மூலம் மக்களின் ஆதரவை பெறலாம் என்ற ஒரு திட்டம் இருக்கும். அது மட்டும் இன்றி இப்படி எல்லாம் கன்டென்ட் கொடுத்தால் விஜய் டிவி நிச்சயம் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையும் ஒரு பக்கம் இருக்கலாம்.

அதனாலேயே இப்போது ரஞ்சித் ஜல்லிக்கட்டு காளை போல் துள்ளிக் கொண்டு சண்டைக்கு பாய்ந்து உள்ளார். இவர்கள் இருவரில் விஜய் டிவியின் ஆதரவு யாருக்கு என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இருந்தாலும் வார இறுதி வரை காத்திருப்போம்.

Trending News