சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

என்ன நடந்தாலும் பார்த்துகிட்டு சும்மா இருக்க நா என்ன ஆண்டவரா.? நெற்றிக்கண்ணை திறந்து ருத்ரமூர்த்தியான பிக்பாஸ்

Biggboss 7: முகத்தை காட்டாமல் குரலை வைத்தே மிரட்டும் வல்லமை பிக்பாஸ் ஒருவருக்கு தான் இருக்கிறது. பல சமயங்களில் போட்டியாளர்களை சுதந்திரமாக விடுபவர் சில நேரங்களில் முழு கோபத்தை காட்டவும் தயங்க மாட்டார். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடந்திருக்கிறது.

இதை பார்க்கும் போது பேசாமல் இவரே வந்து நிகழ்ச்சியை நடத்தலாம். ஆண்டவர் வேண்டவே வேண்டாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு பிக்பாஸ் இன்று ருத்ரமூர்த்தியாக நெற்றிக்கண்ணை திறந்து இருக்கிறார்.

Also read: இதெல்லாம் நாங்க சீசன் 1-லயே பார்த்தாச்சு.. பிக்பாஸ் பரணி போல தப்பிக்க வானரம் போல் தொங்கிய பூமர்

அதாவது இன்றைய டாஸ்க்கில் போட்டியாளர்களுக்கு கரன்சி கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல அவர்கள் தங்களுக்கு ஃபேவரைட் ஆக இருப்பவர்களுக்கு காசை கொடுத்து பித்தலாட்டம் செய்திருக்கின்றனர். இதை பார்த்து கடுப்பான பிக் பாஸ் என்ன நடந்தாலும் பார்த்துக்கிட்டு சும்மா விட்டுடுவேன்னு நினைச்சீங்களா?.

உங்க தகுதிய நீங்களே குறைச்சிக்கிட்டீங்க. இதை பார்த்துட்டு சிரிச்சுக்கிட்டே போக நான் என்ன ஆண்டவரா? உங்களுக்கு விதிமுறைய மதிக்கும் தன்மை இல்லன்னு இப்ப எனக்கு தெளிவாக புரிஞ்சுடுச்சு. இது எனக்கு பெரிய ஏமாற்றம் என்று கூறுகிறார்.

Also read: இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறும் குழப்ப கேஸ்.. பரபரப்பாக நடக்கும் ஓட்டிங்

அந்த ப்ரோமோ தான் இப்போது வைரலாகி வருகிறது. பிக்பாசே கடுப்பாகும் அளவுக்கு போட்டியாளர்கள் தொடர்ந்து அலப்பறை செய்து வருகின்றனர். அதிலும் விதிமுறைகளை மீறுவது இந்த சீசன் போட்டியாளர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி இருக்கிறது.

நீ என்ன சொல்றது நாங்க என்ன கேட்கிறது என மாயா, விசித்ரா உட்பட அனைவரும் அதைத்தான் செய்து வருகின்றனர். அதிலும் இன்று மாயா, பூர்ணிமா இருவரும் குழாயடி சண்டை போடவும் இருக்கின்றனர். ஆக மொத்தம் இன்றைய எபிசோட் கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்த ரணகளமாக இருக்கும் என்று தெரிகிறது.

Trending News