Jayam Ravi: ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன் வெளிவந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படத்திற்குப் பிறகு தற்போது அவர் நடித்துள்ள பிரதர் ரிலீஸ்க்கு தயாராகி இருக்கிறது. தீபாவளிக்கு இப்படம் வெளியாவதை ஒட்டி பட ப்ரமோஷன் ஜோராக நடந்து வருகிறது.
அதே சமயம் அவருடைய 34-வது படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் வெளிவந்தது. டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார்.
இதன் போஸ்டரே வித்தியாசமாக இருந்தது. இரண்டு வித்தியாசமான லுக்கில் இருக்கும் ஜெயம் ரவியின் பாதி பாதி முகம் இணைத்து அந்த போஸ்டர் வெளியாகி இருந்தது.
வரும் டிசம்பரில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என்ற நிலையில் தற்போது முக்கிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. அதாவது இப்படத்திற்கு லியோ சர்ச்சை புகழ் ரத்னகுமார் தான் திரைக்கதை எழுதி இருக்கிறார்.
ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் பிரதீப் ஆண்டனி
ஏற்கனவே டாடா வேற லெவல் வெற்றி பெற்றிருந்த நிலையில் இப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதை அதிகப்படுத்தும் வகையில் தற்போது பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி இந்த ப்ராஜெக்டில் இணைந்துள்ளார்.
டாடா படத்திலும் நண்பன் கவினுக்காக இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதை தொடர்ந்து இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ள அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக மாறிய இவருக்கு இப்படம் நிச்சயம் கை கொடுக்கும் என தெரிகிறது. தற்போது இந்த செய்தியால் சந்தோஷத்தில் இருக்கும் அவருடைய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.