வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சிங்கம் சிங்கிளா தான் வரும்.. ஆட்டத்தை மாற்றிய பிக்பாஸ், டைட்டில் யாருக்கு சொந்தம்.?

Biggboss 8: பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து 50 நாட்கள் கடந்து விட்டது. ஆனாலும் நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எதிர்பார்த்த சுவாரஸ்யம் குறைவாக தான் இருக்கிறது. யாருடைய முகம் உண்மையானது போலி எது என்று கூட கணிக்க முடியவில்லை.

அந்த அளவுக்கு போட்டியாளர்கள் சேஃப் கேம் ஆடி வருகின்றனர். இதற்கு நிகழ்ச்சி கேர்ள்ஸ் டீம் பாய்ஸ் டீம் என பிரிந்தது கூட காரணமாக இருக்கலாம். அதனால் பிக்பாஸ் தற்போது மொத்த ஆட்டத்தையும் மாற்றி உள்ளார்.

அதன்படி இந்த வாரத்தில் இருந்து வீட்டுக்கு நடுவில் எந்த கோடும் கிடையாது. சிங்கம் சிங்கிளா தான் வரும் என்ற மாதிரி தனித்துவமான ஆட்டத்தை போட்டியாளர்கள் ஆட இருக்கின்றனர்.

இதை நேற்றிய நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி அறிவித்த நிலையில் எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். இனி ஒவ்வொருவரின் முகத்திரையும் கிழிந்து உண்மை முகம் வெளிவரும்

சூடு பிடிக்கும் பிக் பாஸ் ஆட்டம்

இது இந்த வார ஓட்டிங் நிலவரத்தை கூட மாற்ற வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் இறுதிப் போட்டி வரை யார் செல்வார் எனவும் யூகிக்க முடியும். ஏற்கனவே கடுமையான போட்டியாளர்கள் லிஸ்டில் முத்துக்குமரன், ஜாக்குலின், தீபக் ஆகியோர் இருக்கின்றனர்.

மேலும் சௌந்தர்யாவுக்கு சோசியல் மீடியாவில் ஆதரவு இருக்கிறது. இதற்கு அவருடைய பி.ஆர் டீம் முக்கிய காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால் இதற்கு மேல் கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் தன்னுடைய திறமையை நிரூபித்தால் தான் வீட்டில் இருக்க முடியும்.

அதன்படி வரும் வாரங்களில் வீட்டில் இருக்கும் டம்மி பீஸ் ஒவ்வொருவராக வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆக மொத்தம் பார்வையாளர்கள் எதிர்பார்த்த சம்பவம் இனிமேல் தான் நடக்க இருக்கிறது.

Trending News