வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புது வரவுகளால் மன உளைச்சல் தாங்க முடியல பிக்பாஸ்.. மொட்ட கடுதாசி எழுதிய சூனா பானா

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி புது வரவுகளால் சூடு பிடித்துள்ளது. தற்போது சீனியர் ஜூனியர் இருவருக்கும் இடையே நடக்கும் பனிப்போர் தான் செம கன்டென்ட் ஆக இருக்கிறது.

அதை எதிர்பார்த்த பிக் பாஸ் வெரைட்டியான டாஸ்க் கொடுத்து இரு தரப்பையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். அதில் நேற்று எந்த இரண்டு பேர் மற்றவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என கேட்கப்பட்டது.

இதில் வைல்ட் கார்டு என்ட்ரியின் பெயர்தான் அதிகம் சொல்லப்பட்டது. அதை அடுத்து இன்று பட்டப்பெயர் வைக்க வேண்டும் என கோர்த்து விட்டார் பிக்பாஸ். உடனே எல்லோரும் முதல் ஆளாக வந்து ஆர்வக்கோளாறு, மூட்டைப்பூச்சி, கருத்து கந்தசாமி என பெயர்களை அடுக்கினார்கள்.

களைக்கட்டும் பிக் பாஸ் டாஸ்க்

அதைத்தொடர்ந்து இப்போது மொட்ட கடுதாசி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.. மனசுல இருக்கிறத தைரியமா சொல்ல ஒரு வாய்ப்பு. போனா திரும்ப வராது இந்த சான்ஸ் என பிக் பாஸ் அறிவிக்க போட்டியாளர்களும் மனக்குமுறல்களை காகிதம் வழியாக கொட்டி தீர்த்துள்ளனர்.

அதில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு மொட்ட கடுதாசியில் பிக் பாஸ் வீட்டில் சந்தோஷமே இல்ல மன உளைச்சல் தான் இருக்கு. இதுக்கு காரணம் புதுசா வீட்டுக்கு வந்தவர்கள் தான் என சூனா பானா ஒட்டுமொத்த போட்டியாளர்களின் பிரதிநிதியாக கடிதம் எழுதி இருக்கிறார்.

மேலும் ரியாங்கற பொண்ணு யுக்தி என்ற பேரில் எல்லார் மனதையும் காயப்படுத்தி வருகிறார். விரைவில் மக்கள் அவருக்கான தீர்ப்பை கொடுப்பார்கள் என ஆடியன்ஸுக்கு ஒரு குறிப்பையும் கொடுத்துள்ளனர்.

அதாவது அடுத்த நாமினேஷனில் நீ சிக்குவ என்பதையும் அந்த போட்டியாளர் மறைமுகமாக சொல்லி இருக்கிறார். இன்னொன்று மக்கள் அடுத்த வாரம் எப்படியாவது இந்த பொண்ண வீட்டை விட்டு துரத்த ஹெல்ப் பண்ணுங்க என்பது போலவும் அந்த கடிதம் இருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

Trending News