செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சைக்கோவுக்கும், சைக்காலஜிக்கும் நடக்கும் யுத்தம்.. இரு அணியான பிக் பாஸ் வீடு, வெற்றி யாருக்கு.?

Biggboss 7: இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றிய விவாதம் தான் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. எந்த சீசனிலும் இந்த அளவுக்கு சர்ச்சை கிடையாது என்ற கருத்துக்களும் நிறைந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் போட்டியாளர்களின் விளையாட்டு வியூகம் தான்.

எங்க அடிச்சா எங்க வீழ்வாங்கன்னு ஒருசில போட்டியாளர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அவர்களால்தான் இப்போது ஆட்டமும் களைகட்டி வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் வீடு இப்போது மாயா, விசித்ரா என இரு அணிகளாக பிரிந்துள்ளது. இவர்களின் தலைமையில் மற்றவர்கள் செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது.

மாயா அணி: இதில் பூர்ணிமா, ஜோவிகா, விக்ரம், அக்ஷயா, பிராவோ, நிக்சன், கானா பாலா ஆகியோர் இருக்கின்றனர். இவர்களை தன்னுடைய அல்லக்கைகளாக மாற்றும் மாயா பல யுக்திகளை கையாளுகிறார். அதில் படை தளபதி போல் செயல்படும் பூர்ணிமா எதிராளிகளை காலி செய்ய நன்றாகவே வேலை செய்கிறார்.

Also read: சும்மா இருந்த சிங்கத்த சுரண்டி விட்ட நிக்சன்.. செம பல்பு கொடுத்த அர்ச்சனா

அதேபோன்று இவர்களுக்கு கோரஸ் பாடும் பக்க வாத்தியங்களாக மற்றவர்கள் இருக்கின்றனர். இவர்களையெல்லாம் எப்போது வேண்டுமானாலும் காலி செய்து விடலாம் என்பதுதான் மாயாவின் திட்டம். தற்போது மக்கள் ஆதரவை பெற்றிருக்கும் எதிரணியை சாய்க்க வேண்டும் என இந்த சைக்கோ கூட்டம் கூட்டு சதியில் ஈடுபட்டு வருகிறது.

விசித்ரா அணி: சைக்காலஜி படித்திருக்கும் இவருக்கு எங்க எப்படி பேசணும் என நன்றாகவே தெரிந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஓட்டுகளை பெறுவதற்காக எந்த வழியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற யுக்தியும் தெரிந்திருக்கிறது. அதனாலே இப்போது அவர் கடுமையான போட்டியாளராக மாறி இருக்கிறார்.

எந்த சீசனிலும் மூத்த கலைஞர்கள் இத்தனை நாள் வீட்டில் தாக்குப் பிடித்தது கிடையாது. ஆனால் விசித்ரா திறமையாக விளையாடுவதன் மூலம் அதை செய்து காட்டியிருக்கிறார். அதேபோன்று இவருடைய அணியில் அர்ச்சனா, தினேஷ், மணி, ரவீனா, அவ்வப்போது கூல் சுரேஷ் ஆகியோர் இடம் பிடிக்கின்றனர்.

Also read: மானத்தை வித்தாவது டைட்டில வின் பண்றோம்.. ஆண்களை பகடைக்காயாக உருட்டும் மாயா மாஃபியா

வெற்றி யாருக்கு.? இதில் எதிலும் ஒட்டாத ஒரு கேரக்டர் விஷ்ணு. இரண்டு பக்கமும் மாறி மாறி சண்டை இழுப்பது தான் இவருடைய யுக்தி. இவ்வாறாக இந்த அணி மாயாவுக்கு ஆட்டம் காட்டி கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த இரு அணிகளின் தலைவர்கள் நிச்சயம் இறுதி போட்டி வரை வருவார்கள். அதில் வெற்றி யாருக்கு என்பது தான் சுவாரஸ்யம் கலந்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Trending News