புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரஜினி ரசிகரான பிஜிலி ரமேஷ் காலமானார்.. இறப்புக்கான காரணம்

Bijili Ramesh : ரஜினியின் தீவிர ரசிகராக சினிமாவில் நுழைந்தவர் தான் பிஜிலி ரமேஷ். யூட்யூபில் பிளாக்ஷீப் சேனலில் வைரல் வீடியோ ஆனால் பிராண்ட் வீடியோவில் ட்ரெண்ட் ஆனவர் தான் பிஜிலி ரமேஷ். இதைத்தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஜெயம் ரவியின் கோமாளி, பொன்மகள் வந்தாள், ஆடை, ஜாம்பி போன்ற படங்களில் அடுத்தடுத்த வாய்ப்புகளும் பிஜிலியை தேடி வந்தது.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளும் பங்கு பெற்றார். இவ்வாறு சினிமாவில் அடுத்தடுத்த உயரத்திற்கு சென்று கொண்டிருந்த ரமேஷின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது அவரது குடிப்பழக்கம் தான்.

பிஜிலி ரமேஷ் காலமானார்

அதாவது அவரது திருமணத்திற்கு முன்பு செய்த தவறுகள் மற்றும் ஓவர் குடியால் அதன் விளைவை சந்திப்பதாக ஒரு பேட்டியில் பிஜிலி கூறியிருந்தார். குடிப்பழக்கத்தால் அவரது உடல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் யூடியூப் வாயிலாக பலரிடம் உதவி கரம் கேட்டிருந்தார். அதோடு இனிமேல் யாரும் குடி பழக்கத்திற்கு அடிமையாகாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இத்தனை நாளாக மிகவும் போராடி வந்த பிஜிலி ரமேஷ் காலமானார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ரமேஷின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் செய்ய உள்ளனர். மேலும் பிஜிலி ரமேஷ் இறப்புக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

ரஜினியின் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ்

Trending News