Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

பிஸ்லெரி பாட்டில் தண்ணீரைக் குடிக்கலாமா? FSSAI எடுத்த அதிரடி முடிவு!

பிஸ்லெரி பாட்டில் தண்ணீரைக் குடிக்கலாமா? FSSAI எடுத்த அதிரடி முடிவு!

இந்தியாவில் மிகவும் பிரபலமான குடிநீர் பிராண்டுகளில் ஒன்றான பிஸ்லெரி நிறுவனத்துக்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் குடிநீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான ரசாயனப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI சட்ட நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.


கடந்த 2025 செப்டம்பர் மாதம் கோவாவில் உள்ள பிஸ்லெரி உற்பத்தி ஆலையில் இருந்து ஆறு குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டன.இதில் ஐந்து மாதிரிகள் தரநிலைகளுக்கு உட்பட்டு இருந்த நிலையில்,ஒரு மாதிரியில் ப்ரோமேட் (Bromate) அளவு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் எனப் பதிவானது.ஆனால்,இதற்கான அனுமதிக்கப்பட்ட அளவு 10 மைக்ரோகிராம் மட்டுமே.இதையடுத்து அந்த மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.


இதனை எதிர்த்து நிறுவனம் மேல்முறையீடு செய்த நிலையில்,மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs)என்ற வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதாக FSSAI தெரிவித்துள்ளது.இதன் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம்,2006-ன் கீழ் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஆனால், பிஸ்லெரி நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. தனது சொந்த ஆய்வகப் பரிசோதனையில் ப்ரோமேட் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருந்ததாகவும், உற்பத்தியில் கடுமையான தரக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் குடிநீர் பிராண்டுகளின் மாதிரிகளை ஆய்வு செய்யவும் FSSAI திட்டமிட்டுள்ளது.இருப்பினும்,வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பிஸ்லெரி நிறுவனம் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.