வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பூஜாவுக்கு சாங் போட்டே விருதை தட்டி சென்ற டிஜே பிளாக்.. விஜய் டிவி செய்த மட்டமான வேலை

பொதுவாக தமிழ் சினிமாவில் எத்தனையோ சேனல்கள் இருக்கின்றன. அதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் டிவி, ஜெயா டிவி இப்படி ஏகப்பட்ட சேனல்கள் இருந்தாலும் இது எல்லாத்தையும் பின்னுக்கு தள்ளி டாப்பில் முதலில் இருக்கிறது நம்ம விஜய் டிவி சேனல் தான். இதில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மக்களின் அதிக கவனத்தைத் திருப்பி இருக்கிறது.

அதில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் 1 இல் ஆரம்பித்து தற்போது சூப்பர் சிங்கர் 9 வரை ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் சீனியர் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர். திறமை இருக்கும் கலைஞர்களுக்கு பெரிய வாய்ப்பு கொடுக்கும் விதமாக இருக்கிறது.

Also read: பிரம்மாண்டமாக நடந்த 8-வது விஜய் டிவி அவார்டு நிகழ்ச்சி.. ரெண்டு முறை விருதை தட்டிச் சென்ற ஒரே சீரியல்

தற்போது சூப்பர் சிங்கர் 9 போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுது சூப்பர் சிங்கர் 9 என்று சொன்னாலே சிங்கர்ஸ் பெயர் நம்முடைய ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ கண்டிப்பா டிஜே பிளாக் மற்றும் பூஜா தான் ஞாபகத்துக்கு வருவார்கள். அந்த அளவுக்கு இவர்கள் ரெண்டு பேரும் இதில் பேமஸ் ஆகி விட்டார்கள். ஆனால் இதை இப்படியும் சொல்லலாம் விஜய் டிவி கரெக்டா இவர்களை வச்சு நல்லாவே செய்யறாங்க.

இதுவரை எத்தனையோ சூப்பர் சிங்கர் அதாவது எட்டு சீசன் நடந்திருக்கிறது. இதற்கு முன்னாடி வரை பேக்ரவுண்ட் சாங் போடுகிற டிஜே யார் என்று கூட நம்மளுக்கு தெரியாது. ஆனால் இப்பொழுது வந்த ஒரு சீசன் மூலமாக மிகவும் பிரபலமாகி வந்தவர் தான் டிஜே பிளாக். இவரிடம் சொல்லும்படியாக எத்தனையோ திறமைகள் இருந்திருக்கலாம் ஆனால் இவர் அதிகமாக பேமஸ் ஆனது என்றால் சூப்பர் சிங்கர் பூஜாவை வைத்து தான்.

Also read: எம்ஜிஆர் முதல் அம்பி வரை.. பாக்கியலட்சுமி கோபி கலக்கிய விதவித கெட்டப்

இவர் பாட வந்தால் அதுக்கு ஒரு சாங், பேசினா ஒரு சாங், பூஜா என்று பெயர் வந்தாலே அதற்கும் ஒரு சாங் இப்படி அவள் தும்மினால் ஒரு சாங், நடந்தால் ஒரு சாங் என்று  பூஜாவை உஷார் பண்ணினது மட்டுமில்லாமல் மக்களிடமும் பெரிதாக ரீச் ஆகிவிட்டார். அதிலும் இவரை என்கரேஜ் பண்ற மாதிரி விஜய் டிவியும் சேர்ந்து பண்ற லூட்டிக்கு அளவே கிடையாது.

இவங்கள வச்சு தான் சூப்பர் சிங்கர் 9 போய்க்கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் டிஜே பிளாக் மற்றும் பூஜா. இந்த மட்டமான வேலையை விஜய் டிவி எப்பொழுது நிறுத்தப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் இதை ஆதரிக்கும் விதமாக தற்போது நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டில் தூள் மூமண்ட் என்ற விருதை பிஜே பிளாக்கிற்கு கொடுத்து இருக்கிறார்கள்.

Also read: குணசேகரனை ஓவர்டேக் செய்யும் ஜனனி.. ரேணுகா கதிருக்கு கொடுத்த பதிலடி

Trending News