சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Annamalai : ஆச்சரியம் ஆனால் உண்மை, பிஜேபி அண்ணாமலை பயோபிக் ரெடி.. லைக்கா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ஹீரோ 

சமீபகாலமாக அரசியலில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர் தான் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவரான இவர் இப்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோயமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறார். 

அண்ணாமலை அரசியலுக்கு வருவதற்கு முன் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். ஒரு போலீஸ் அதிகாரி அரசியலுக்குள் எப்படி நுழைந்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை இப்போது படமாக எடுக்க உள்ளனர். 

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இயக்குனர் யார் என்ற தகவல் பின்பு தான் வெளியாக இருக்கிறது. ஆனால் அண்ணாமலையாக நடிக்க அவருடைய உருவ ஒற்றுமையில் இருக்கும் ஹீரோவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்கிறது லைக்கா.

அண்ணாமலையாக நடிக்கப் போகும் விஷால்

நடிகர் விஷால் தான் அண்ணாமலையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் அவருடைய ரத்னம் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. விஷாலுக்கும் அரசியல் மீது மிகுந்த ஆர்வம் இருக்கிறது. 

ஏனென்றால் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் வேட்பமான விஷால் தாக்கல் செய்திருந்தார். சில காரணங்களால் அது நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். 

கடந்த சில மாதங்களாகவே விஷால் பிஜேபிக்கு சப்போர்ட் செய்து வருகிறார். மேலும் அரசியலில் விஷால் இறங்கினால் கண்டிப்பாக பிஜேபி உடன் கூட்டணி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. இப்போது அண்ணாமலையாக நடிக்கும் வாய்ப்பும் விஷாலுக்கு கிடைத்திருக்கிறது.

Trending News