வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Black படம் அந்த ஹிட் படத்தின் Copy தான்.. திருட்டு மாங்காதான் ருசியா இருக்கும் – ஜீவா

ஜீவாவின் நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில், இப்படம் ஹாலிவுட் படத்தின் காபியா என்று பலர் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், இதுகுறித்து நடிகர் ஜீவா விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவில் ஆர்.பி.செளத்ரியின் மகனாக அறிமுகமானாலும் சில தோல்விகளுக்குப் பின், ராம், ஈ, கற்றது தமிழ் ஆகிய படங்களில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டார். அதன்பிறகு, ராஜேஷின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படம் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்பிறகு கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான கோ படம் அவரது கேரியரில் பெரிய பிரேக் கொடுத்தது. அதன்பிறகு விஜயுடன் இணைந்து நண்பன் படத்தில் அசத்தியிருந்தார். ஜீவாவுக்கு ஒரு நல்ல கதையம்சத்துடன் படங்கள் இன்னும் அமையவில்லை என சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர்.

Black படம்

இந்த நிலையில், கே.ஜில் பாலசுப்பிரமணி இயக்கத்தில், எஸ்.ஆர்.பிரபு மற்றும் கோபிநாத் தயாரிப்பில், ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிளேக். இப்படத்திற்கு கோகுல் பினேய் ஒளிப்பதிவு செய்ய, பிளமின் ராஜ் எடிட் செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

ஹாரர் ஜார்னலில், 118 நிமிடங்கள் ஓடும் நேரமுள்ள இப்படம் ஹாலிவுட் படத்தில் தழுவலா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலில் பங்கேற்றுப் பேசிய ஜீவா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து ஜீவா கூறியதாவது:

”’நான் சினிமாவில் 20 ஆண்டுகளாக இருக்கிறேன். முதலில் சினிமாவுக்கு வந்தது ஒரு இயக்குனராக, டெக்னீசியனாக அனிமேசனில் எதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

என் கேரியரில் புதிதாக செய்ய நினைத்து செய்தது பிளேக் படம். ஒவ்வொரு பிரேமும் வேஸ்ட் பண்ண கூடாது என 100 சதவீதம் உழைப்பு கொடுத்தேன். இது ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான். ஆனால் முறையாக ரைட்ஸ் வாங்கி, ஆங்கிலப் படத்தை ரீமேக் செய்துள்ளோம். ஆங்கில படத்தை ரீமேக் செய்ததை நினைத்து பெருமைப்படுகிறோம். இறுதிப்பற்று படத்தில் ஒரு கேமிரோ ரோலில் செய்ய தயாரிப்பாளர் அழைத்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை, அதனால் முழு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தேன். அதன்படி, இப்படக்குழு அமைந்தது. படமும் நன்றாக உருவாகியுள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும்’’ என்று கூறியுள்ளார்.

ஜீவாவின் நடிப்பில் ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரைப் பார்த்து பலரும் பல்வேறு விமர்சனங்களைக் கூறி வந்த நிலையில் ஜீவாவே இது ஹாலிவுட் பட ரீமேக் என்று கூறியுள்ளதால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பலர் பல்வேறு மொழிகளில் வெளியாகி ஹிட்டாகும் படத்தை தழுவி எந்த ரைட்ஸும் இல்லாமல் படம் எடுக்கும் நிலையில், பிளேக் படக்குழு முறைப்படிதான் இதை தமிழுக்கு ஏற்ப படமாக எடுத்துள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். இப்படம் நாளை வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Trending News